பிக் பாஸ் சீசன் 7 போட்டியிலிருந்து தற்போது வனிதாவின் மகள் ஜோவிகா வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சவாலான போட்டியாளர், இறுதி வரை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் பாதியிலேயே வெளியேறி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் திரையுலகில் பிரபல சர்ச்சை நாயகியாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். மூன்று திருமணங்கள், நான்காவதாக காதல் திருமணம், தனது தந்தையுடன் மோதல், தனது மகனுடன் சண்டை, ஒதுக்கி வைத்த குடும்பம் என்று சர்ச்சைக்கு பெயர் போன நடிகையாக இருப்பவர் வனிதா. இவருக்கு பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதன் பின்னர் அவருக்கு சில ஆதரவாளர்களும் உருவாகினார்.

பிக் பாஸில் இருந்து வெளியே வந்த வனிதா, தனது மகளுடன் இணைந்து ஆடை வடிவமைப்பு மற்றும் வியாபாரத்தை செய்து வந்தார். பின்னர் தனது மூத்த மகள் ஜோவிகாவை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக அனுப்பி வைத்தார். சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டார் ஜோவிகா, முதல் வாரத்திலேயே விசித்ராவுடன் படிப்பு குறித்து சண்டையை போட்டு வைரலானார். தான் சிறுவயதில் சந்தித்த பல நிகழ்வுகளால் தன்னால் சரியாக படிக்க முடியவில்லை, அதனால் நான் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டதாக பேசியிருந்தார். அப்போது விசித்ரா வெளியில் சென்று ஏதாவது ஒரு பட்டப் படிப்பை முடிக்குமாறு அறிவுரை சொல்ல, விசித்ராவுக்கும் ஜோவிகாவிற்கும் முட்டிக்கொண்டது. இருவரும் கடுமையாக சண்டையிட்டு கொண்டனர்.
அப்போது ஜோவிகாவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஜோவிகாவின் தெளிவான பேச்சும், வீட்டில் அவர் நடந்து கொண்ட முறையும் வைத்து பலரும் அவர் இறுதிப் போட்டியாளராக வருவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர் நாட்கள் செல்ல செல்ல குறைவான சுவாரசியத்தை வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக வீட்டில் அதிகமாக தூங்கும் நபராக அவர் இருந்து வந்தார். இதனால் அடிக்கடி நாய் குரைப்பதும், மற்றவர்கள் ஜோவிகா மீது கோபப்படுவதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த வார நாமினேஷனில் ஜோவிகா மாட்டிக்கொண்டார். ஆரம்பம் முதலே நமது இணையதளத்தில் எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பிலும் ஜோவிகா கடைசி இடத்தையே பிடித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல் வழியாக இருக்கிறது. பலரும் சரவண விக்ரம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், தற்போது ஜோவிகா வெளியேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.