விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் தற்போது சூர்யாவை ரவுடிகள் கல்லால் தாக்கிய அவரை கொலை முயற்சி செய்துள்ளனர். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சூர்யா அருகில் அமர்ந்து கொண்டு வெண்ணிலா அழுது கொண்டிருக்கிறார். அப்படி ஒரு ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டு இருக்கிறது. காற்றுக்கென்ன வேலி சீரியல் சற்று வித்தியாசமான கதையம்சம் கொண்டது. இதில் ஹீரோவாக இருக்கும் சூர்யாவுக்கு தன் கல்லூரியில் படிக்கும் வெண்ணிலா மீது காதல் வருகிறது. இருவரும் காதலிக்கின்றனர். ஒரு கட்டத்தில் வெண்ணிலாவை சூர்யா திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் வெண்ணிலாவை கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டு விட்டதாக சொல்லி வெண்ணிலா சூர்யாவுடன் இணைந்து வாழாமல் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காற்றுக்கு என்ன வேலி சீரியல் தற்போது கதை இல்லாமல் திணறிக் கொண்டிருக்கிறது. இந்த கதையில் வெண்ணிலாவும் சூர்யாவும் ஒரு கிராமத்திற்கு செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படவே ரவுடிகள் இருவரையும் துரத்திக் கொண்டு வருகின்றனர். அப்போது காருடன் வைக்கோல் போரில் இருவரும் ஒளிந்து கொண்டிருக்கின்றனர். இந்த கதையை பல மாதங்களாக ஓட்டிக் கொண்டிருந்தார் இயக்குனர். கதையின் சுவாரஸ்யமும் வேகமும் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டது. மேலும் லாஜிக்கே இல்லாமல் காரிலேயே குளிப்பது உணவு அருந்துவது என்று பல விஷயங்கள் இணையத்தில் பெரும் ட்ரோலுக்கு உள்ளானது. இந்த நிலையில் தற்போது மோட்டார் ரோமில் ஒளிந்து கொண்டிருக்கும் சூர்யா மற்றும் வெண்ணிலாவை ரவுடிகள் கண்டுபிடித்து விடுகின்றனர்.
அப்போது வெண்ணிலாவிடம் பேசும் சூர்யா இதுவே எனக்கு கடைசி நாளாக இருக்கலாம். நான் ஒருவேளை திரும்பி உயிருடன் வந்தால் நீ என்னை ஏற்றுக் கொள்வாயா என்று கேட்கிறார். அப்போது ரவுடிகள் சூர்யா மீது கல்லை தாக்கி அவரை காயப்படுத்துகின்றனர். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சூர்யாவின் அருகில் அமர்ந்து கொண்டு வெண்ணிலா அழுது கொண்டிருக்கிறார். பிக் பாஸ் மற்றும் கிழக்கு வாசல் சீரியல் வருகையினால் இந்த நாடகம் விரைவில் முடிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாக இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television