காற்றுக்கென்ன வேலி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது சூர்யா வெண்ணிலாவை விட்டுவிட்டு தற்போது சிவானியை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறார். அந்த ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் வெண்ணிலாவிற்கு நன்றாக வேண்டும், பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது, சூர்யா எடுத்த முடிவு சரியே என்று சொல்லி தங்களது கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட ஒரு சீரியல்தான் காற்றுக்கென்ன வேலி. சிறுவயதிலிருந்து ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவுடன் இருப்பவர் வெண்ணிலா. ஆணாதிக்கத்தின் உச்சத்தில் இருக்கும் அவளது தந்தையால் பள்ளி படிப்பு முடிந்த உடனேயே திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார். மகளின் வாழ்க்கையை காப்பாற்ற அவரது தாய் அவரை விட்டுவிட்டு வெளியே அனுப்புகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டை விட்டு வெளியேறும் அவர் பேராசிரியர் சூர்யாவின் உதவியுடன் கல்லூரியில் சேர்க்கிறார். பின்னர் எதிர்பாராத விதமாக வெண்ணிலாவும் சூர்யாவும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அந்த காதல் தற்போது திருமணத்தில் முடிந்து இருக்கிறது. திருமணத்திற்கு பின்னர் வெண்ணிலா சூர்யாவை வெறுக்க ஆரம்பிக்கிறார். ஆனால் சூர்யா வெண்ணிலாவை எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். இருப்பினும் தொடர்ந்து வெண்ணிலா சூர்யாவை அவமானப்படுத்துகிறார். இந்த நிலையில் சூர்யாவை திருமணம் செய்து கொள்ள சிவானி விரும்புகிறார். இதை வீட்டில் உள்ள அனைவரும் குறிப்பாக சூர்யாவின் பெரியம்மா சூர்யாவிடம் சிவானியை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திக்கொண்டே இருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் சூர்யா சிவானியை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். இந்த செய்தியை சூர்யாவின் பெரியம்மா வெண்ணிலாவிடம் கூறுகிறார்.
இதை கேட்ட வெண்ணிலா அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். சூர்யாவை தொடர்ந்து அவமானப்படுத்தியும் புறக்கணித்து வரும் வெண்ணிலாவிற்கு இது தேவை தான், சூர்யா எடுத்த முடிவு வருத்தம் அளிப்பதாக இருந்தாலும் இது வரவேற்கத்தக்கதாக இருக்கிறது, வெண்ணிலாவிற்கு இது எல்லாம் போதாது இன்னும் பெரிய அதிர்ச்சியாக கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television