கோதை இண்டஸ்ட்ரீஸ் பக்கம் இனி வந்தால் உன் வாயை உடைத்து விடுவேன் என்று சொல்லி அர்ஜுனை தமிழ் மிரட்டுவது போன்ற ப்ரோமோவை தற்போது தமிழும் சரஸ்வதியும் சீரியல் குழு வெளியிட்டு இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடர் அடுத்தடுத்த பரபரப்பான கட்டங்களை எட்டி வருகிறது. கோதை இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை யார் கைப்பற்றுவது என்று தேர்தல் நடந்து முடிந்து இருக்கிறது.அதில் கோதை ஒருபுறமும் அவரது மகன் தமிழ் ஒருபுறமும் மோதினர். அப்போது மொத்தம் பதிவான 250 வாக்குகளில் 148 வாக்குகள் வாங்கி தமிழ் தேர்தலில் ஜெயித்திருந்தார். கோதைக்கு வெறும் நூற்று இரண்டு வாக்குகள் மட்டுமே கிடைத்தது. தமிழ் பற்றி அவதூறாக போஸ்டர் ஒட்டியதால் தான் தனக்கு வாக்குகள் கிடைக்கவில்லை என்று சொல்லி கோதை தனது மகன் கார்த்திக் மற்றும் மருமகன் அர்ஜுன் இருவரிடமும் கடுமையாக சண்டை போடுகிறார். இருப்பினும் கோதை தோற்றது அவருக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழின் எதிரியாக இருக்கும் அர்ஜுன், தமிழிடம், “நீ தோற்றுவிட்டால் கோதை இண்டஸ்ட்ரீஸ் பக்கமே வரக்கூடாது” என்று சவால் விட்டிருந்தார். அதேபோல தமிழும் நான் ஜெயித்து விட்டால் நீ இந்த ஊரை விட்டே ஓடிவிட வேண்டும் என்று அர்ஜுனை மிரட்டி இருந்தார். இந்த நிலையில் தற்போது அர்ஜுன் கோதை இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு கிளம்பி செல்ல, அதை வசு தற்போது தமிழுக்கு போன் செய்து சொல்கிறார். அர்ஜுன் காரை வழிமறிக்கும் தமிழ் மற்றும் நமச்சி, இருவரும் அர்ஜுனிடம் கோபமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது கோபத்தில் ஏதாவது பேசினால் உன் வாயை உடைத்து விடுவேன் என்று தமிழ் அர்ஜீனை மிரட்டுகிறார். தமிழ் ஜெயித்தால் இவர் கோதை இண்டஸ்ட்ரீஸ்பக்கமே வரக்கூடாது என்று சவால் விட்டிருக்கிறார், ஆனால் தற்போது மட்டும் எப்படி அங்கு வர துடிக்கிறார் என்று நமச்சி கோபமாக கேள்வி கேட்கிறார். அப்போது அங்கு வரும் கோதை மற்றும் நடேசன் நமச்சியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றனர்.

பலரும் நமச்சி பேசியது சரியே என்றும் கோதைக்கு சரியான பதிலடி என்றும் தங்களது கருத்துக்களை கமெண்ட்டுகளில் தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television