Bro.! Cringe ஆ இருக்குனு ஒரு மாதிரி பேசுறாங்க.! வெளியானது ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ..!

இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த ப்ரோமோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். தமிழ் திரையுலகம் மட்டும் அல்லாமல் இந்திய திரையுலகிலும் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது தனது 168வது படமான ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து இருக்கிறது. திறமைக்கு அழகோ நிறமும் தேவையில்லை என்பதை நிரூபித்தவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் இதுவரை 168 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த நிலையில் நெல்சன் உடன் கைகோர்த்து இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Bro.! Cringe ஆ இருக்குனு ஒரு மாதிரி பேசுறாங்க.! வெளியானது ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ..! 1
இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகை தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். கடந்த மாதம் ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாத நிலையில் படத்தின் அப்டேட் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். படம் வெளியாக இன்னும் 38 நாட்களே மீதமுள்ள நிலையில் படத்தின் அப்டேட் குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இசையமைப்பாளர் அனிருத்திடம் ஃபர்ஸ்ட் சிங்கள் எப்போ என்று நெல்சன் கேட்பது போல ஒரு சிறிய வீடியோ ஒன்றை வெளியாகி இருந்தது. மேலும் தலைவர் ரஜினிகாந்த் என்று ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் என்று அனிருத் ஒரு ட்வீட் ஒன்றைப் போட்டிருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  இப்படி கத்திகிட்டே இருந்தீனா நான் கிளம்பி போய்கிட்டே இருப்பேன்.! டென்ஷன் ஆன இளையராஜா.!

Bro.! Cringe ஆ இருக்குனு ஒரு மாதிரி பேசுறாங்க.! வெளியானது ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ..! 3
இது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில், நேற்று புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தது. அதேபோல தற்போது ஃபர்ஸ்ட் சிங்கள் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun Tv

விளம்பரம்

Leave a Comment