Categories: சினிமா

HIPHOP ஆதி இயக்கி நடிக்கும் கடைசி உலகப்போர் படத்தின் FirstSingle வெளியாகியது..!

வெளியிட்டது

இசையமைப்பாளராக சினிமாவுக்குள் அறிமுகம் ஆகி இருந்தாலும் நடிகர் மற்றும் இயக்குனர் என ஒரே நேரத்தில் வெள்ளித்திரையில் அறிமுகமாகி கலக்கியவர் ஹிப் ஹாப் தமிழா. பல ஆல்பம் பாடல்களை பாடி பல ரசிகர்களை தனக்காக உருவாக்கி மெல்ல மெல்ல உயர்ந்து இன்று சினிமாவில் முக்கிய நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்று இருக்கிறார் ஹிப் ஹாப் தமிழா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

HIPHOP ஆதி இயக்கி நடிக்கும் கடைசி உலகப்போர் படத்தின் FirstSingle வெளியாகியது..! 1

இளைஞர்களை கவரும் விதமாக நல்ல படங்களை சினிமாவில் கொடுத்து வரும் இவர் தற்போது இரண்டாவது முறையாக இயக்கத்தில் களம் இறங்கி உள்ளார். இவர் இயக்கி நடித்து இசையமைத்து இருக்கும் படம் கடைசி உலகப்போர். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய கவனம் பெற்று இருக்கிறது. மிகப்பெரிய தாக்கத்தை டீசர் ரசிகர்களிடம் உருவாக்கி இருக்கிறது.

இப்படத்தை அடுத்த மாதம் படக்குழு வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது. இப்பாடலை ஹிப் ஹாப் தமிழாவே எழுதி இசையமைத்து பாடி இருக்கிறார். இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. நீண்ட நாள் கழித்து ஹிப் ஹாப் ஆதி இசையில் தரமான பாடல் வெளியாகி இருப்பதாக அவரின் ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Embed Video Credits : THINK MUSIC INDIA

வெளியிட்டது

புதிய செய்திகள்