வயநாட்டிற்கு ரூ.1 கோடி ஒன்றாக இணைந்து வழங்கிய குஷ்பு , மீனா மற்றும் சுஹாசினி..!

பருவமழை கேரளாவில் தீவிரமடைந்து உள்ளதால், வயநாட்டில் கடந்த வாரம் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணியானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல நட்சத்திரங்களும் வயநாட்டிற்கு தங்களால் முடிந்த நிதி உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

வயநாட்டிற்கு ரூ.1 கோடி ஒன்றாக இணைந்து வழங்கிய குஷ்பு , மீனா மற்றும் சுஹாசினி..! 1

விளம்பரம்

நடிகர் விக்ரம் ரூ .20 லட்சம் , நயன்தாரா ரூ .20லட்சம் மற்றும் நடிகர் சூர்யா குடும்பத்தினர் ஒன்றாக 50 லட்சம் வழங்கி உள்ளனர். பல நடிகர்களும் தொடர்ந்து மறைமுக உதவிகளை வயநாட்டிற்கு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தமிழ் சினிமா நடிகைகளும் நெருங்கிய தோழிகளுமான குஷ்பு , மீனா மற்றும் சுஹாசினி அவர்களின் நண்பர்களுடன் சேர்ந்து 1கோடி ரூபாய் நிவாரணம் வழங்கி உள்ளனர்.

வயநாட்டிற்கு ரூ.1 கோடி ஒன்றாக இணைந்து வழங்கிய குஷ்பு , மீனா மற்றும் சுஹாசினி..! 3

விளம்பரம்

கேரளா முதல்வர் பினராய் விஜயனை நேரில் சந்தித்து அவர்களிடம் தொகையை வழங்கி உள்ளனர். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி உள்ள நிலையில் , ரசிகர்கள் அவர்களின் செயல்களை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment