தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர். இவரின் நகைச்சுவைக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. விஜய்டிவியில் சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் அறிமுகமாகி இன்று சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வருகிறார் ரோபோ சங்கர். தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் இவர், அண்மையில் தனது மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்து இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தந்தையை போல மகளும் சினிமாவை கலக்கி வருகிறார். அறிமுகமாகிய முதல் படமே தளபதி விஜயின் பிகில். இப்படத்திற்கு பிறகு விருமன் படத்தில் நடித்து கலக்கி இருந்தார். தற்போது இவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து உள்ளார். அவருக்கு விஜய் டிவி நலுங்கு வைத்து இருக்கிறது. இதனால் ரோபோ சங்கர் மற்றும் அவரின் மனைவி மகிழ்ச்சியாக உள்ளனர்.

இந்திரஜா ரோபோ சங்கருக்கு தங்களது வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரோபோ சங்கர் தான் தான் மிக இளமையான தாத்தா என கூறி அனைவரையும் சிரிக்க வைத்து உள்ளார்.