Categories: சினிமா

கடைசி உலகப்போரில் வென்றாரா ஆதி.. கடைசி உலகப்போர் படத்தின் திரை விமர்சனம் இதோ..!

வெளியிட்டது

நடிகர் ஹிப் ஹாப் ஆதி இயக்கி தயாரித்து இசையமைத்து நடித்திருக்கும் படம் கடைசி உலகப்போர். இப்படத்தில் நாயகியாக அனகா நடித்து உள்ளார். மேலும் இப்படத்தில் நட்ராஜன் , சிங்கம்புலி , முனீஸ்காந்த் என பலரும் நடித்து உள்ளனர். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் விமர்சனத்தை இங்கு விரிவாக காணலாம்.

கடைசி உலகப்போரில் வென்றாரா ஆதி.. கடைசி உலகப்போர் படத்தின் திரை விமர்சனம் இதோ..! 1

படத்தின் கதை

2028ல் நடக்கும் கதைபோல காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது படம். உலகம் தற்போது ரிபப்ளிக் நாடு மற்றும் பிற நாடுகள் என இரண்டாக பிரிந்து இருக்கிறது. இதில் இந்தியா நடுநிலையாக இருக்கிறது. அதே சமயம் முதல்வர் மச்சான் மற்றும் பினாமியாக வரும் நட்ராஜன், ஹார்பரில் கன்டெய்னரில் சிக்கிய பணத்தை எடுக்க திட்டம் தீட்டுகிறார். அதனால் அவர் ஒரு கலவரத்தை உருவாக்குகிறார். கலவரம் அதிகரிக்கவே , ராணுவம் தமிழகத்தை கைப்பற்றுகிறது. முதல்வர் மகளாக வரும் அனகா ஹிப் ஹாப் ஆதியை காதலிக்கிறார், அதே சமயம் ஆதியை தீவிரவாதி என ராணுவம் கைது செய்கிறது. மேலும் உலகநாடுகள் இந்தியாவை தாக்க தொடங்கி, சென்னையை அழித்து உள்ளது. இதற்கு பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதையே

படத்தின் விமர்சனம்

உலகப்போர் அளவுக்கு ஹிப் ஹாப் ஆதி இந்த கதையை சிந்தித்து இருந்தாலும் இப்படத்தில் செகண்ட் ஹீரோ போலத்தான் வருகிறார். முதல் ஹீரோ நட்ராஜ் என சொல்லலாம், இவர் தான் கதையை தொடங்கி வைக்கிறார். நட்ராஜ் தன்னை ஒரு கிங் மேக்கராக கூறி எடுக்கும் முட்டாள்தன முடிவுகளே படத்தின் கதையாக நீள்கிறது. படத்தில் நடித்த நாசர், முனிஷ்காந்த், சிங்கம்புலி மற்றும் ஆதி ஆகியோர் தங்களது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளனர்.ஒரு சென்சிடிவ் ஆன கதையை கற்பனையாக சொன்ன விதம் சூப்பராக அமைந்து இருக்கிறது. படத்தை இவ்வளவு கம்மி பட்ஜெட்டில் எடுத்தாலும் VFX Work அருமையாக அமைந்துள்ளது.இருப்பினும் படத்தில் எமோஷனல் காட்சிகளை ஆதி தவறவிட்டு உள்ளார்.வழக்கம் போல் தனது இசையால் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார் ஆதி. மொத்தத்தில் இப்படம் எமோஷனல் இல்லாத உலகப்போர் ஆக மாறி உள்ளது.

வெளியிட்டது

புதிய செய்திகள்