டிக் டாக் மூலம் பிரபலமாகியவர் தான் மிர்னாலினி ரவி. இதன் மூலம் இவர் வெள்ளித்திரைக்கு அறிமுகம் ஆகினார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு இருந்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக எனிமி படத்தில் நடித்து இருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற மாலை டம் டம் என்ற பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. இப்பாடல் வைரலானதை தொடர்ந்து அனைவராலும் மிர்னாலினி அறியப்பட்டவர் ஆகினார். இப்படத்திற்கு பிறகு எம்ஜிஆர் மகன், ஜாங்கோ என பல படங்களில் வரிசையாக நடித்து வந்தார் இவர்.பின்னர் விக்ரமுக்கு ஜோடியாக கோப்ரா படத்திலும் நடித்து அசத்தி இருந்தார்.

அண்மையில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரோமியோ படத்தில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். இப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்து வருகிறார் மிர்னாலினி. இவர் பெங்களுருவில் புதிய வீடு ஒன்றை கட்டி கிரஹப்பிரவேசம் செய்து இருக்கிறார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக வெளியிட்டு உள்ளார்.
