லவ் யூ புருஷா.! காதலித்த நாட்களில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கணவரை வாழ்த்திய குஷ்பூ..!

நடிகை குஷ்பூ இன்று தனது 23வது திருமணநாளில் சுந்தர் சியை காதலித்த நாட்கள் தொடங்கி இன்று வரை உள்ள சில புகைப்படங்களை பகிர்ந்து திருமண நாள் வாழ்த்துக்களை கூறி இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வருபவர் நடிகை குஷ்பூ. தமிழ் சினிமாவின் 90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. ரசிகர்கள் கோயில் கட்டும் அளவிற்கு ஒரு நடிகை இருந்தார் என்று சொன்னால் அது குஷ்புவிற்கு தான்.

லவ் யூ புருஷா.! காதலித்த நாட்களில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கணவரை வாழ்த்திய குஷ்பூ..! 1

விளம்பரம்

திருச்சியில் இவரது ரசிகர்கள் இணைந்து இவருக்கு கோவிலே கட்டி இருக்கின்றனர். மும்பையில் பிறந்து வளர்ந்த குஷ்பூ நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார். இவர் 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த முடித்திருக்கிறார் குஷ்பூ. வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் கை தேர்ந்தவராக இருக்கிறார்.

தொடர்புடையவை  துணிவு பட ப்ரோமோஷனலில் கலந்து கொள்கிறார் அஜித்? அஜித் மேனேஜர் விளக்கம்.!

லவ் யூ புருஷா.! காதலித்த நாட்களில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கணவரை வாழ்த்திய குஷ்பூ..! 3

விளம்பரம்

 

குஷ்பூ இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்ட பின்னர் தமிழ்நாட்டிலேயே முழு நேரமாக செட்டில் ஆகிவிட்டார். தற்போது சினிமா சின்னத்திரை, அரசியல், தயாரிப்பு என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். மேலும் தனது கணவருடன் இணைந்து அவ னி சினி மேக்ஸ் என்கிற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 2000 ஆம் ஆண்டு சினிமா துறையில் பிரபல இயக்குனராக இருந்த சுந்தர்சியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என்கிற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

விளம்பரம்

லவ் யூ புருஷா.! காதலித்த நாட்களில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கணவரை வாழ்த்திய குஷ்பூ..! 5

 

விளம்பரம்

ஆரம்பத்தில் இந்த இரண்டு பேருமே குஷ்புவை போல மிகவும் குண்டான உருவத்தில் இருந்ததால் மிகுந்த கேள்விக்கு உள்ளானார்கள். அவர்களை கிண்டல் செய்யும் போதெல்லாம் ஒரு தாயாக துடித்து போன குஷ்பூ பலமுறை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார். இருப்பினும் விமர்சனங்கள் குறையாமல் இருந்ததால் குஷ்பூவின் மகள்கள் இருவரும் மிகவும் முயற்சி செய்து உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறி இருக்கின்றனர். அவர்களுக்கு போட்டியாக குஷ்பூவும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து இருந்தார்.

தொடர்புடையவை  காதலர் தினம் சோனாலியை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருகாங்கன்னு பாருங்க.!

லவ் யூ புருஷா.! காதலித்த நாட்களில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கணவரை வாழ்த்திய குஷ்பூ..! 7

விளம்பரம்

விரைவில் குஷ்பூவின் மூத்த மகன் அவந்திதா ஹீரோயினாக அறிமுகம் ஆக இருக்கிறார். இந்த நிலையில் திருமணமாகி 23 வருடங்களை கடந்துவிட்ட குஷ்பூ சுந்தர் சியை காதலித்த நாட்கள் தொடங்கி திருமணம், குழந்தை, தற்போது என 4 புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார். நம்முடைய பயணம் தொடர்கிறது! 4 புகைப்படங்களில் படங்களில் எங்கள் வாழ்க்கையை கூறியுள்ளேன்.

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

விளம்பரம்

அன்று முதல் இன்று வரை எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் என்னுடன் இருப்பதற்கு நன்றி. என்னை நேசிப்பது, சண்டை போடுவது, திட்டுவது, எல்லாவற்றுக்கும் மேலாக என்னைப் புரிந்துகொண்டு என்னை நேசிப்பது. நான் என்னவாக இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக்கொள்வது. உங்களுடன் திருமணம் ஆனது என்னுடைய பாக்கியம். 23வது திருமண நாள் வாழ்த்துக்கள் அன்பான கணவரே என்று பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

விளம்பரம்

Leave a Comment