தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்து உள்ளார் ஜெயம் ரவி. ஜெயம் படத்தின் மூலம் அறிமுகம் ஆகியதால் இவரை ரசிகர்கள் ஜெயம் ரவி என அழைத்து வருகின்றனர் .இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. இவர் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.இப்படத்திற்கு பின்னர் தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஜெயம் ரவி நடித்து வருகிறார். இவருக்கு அடுத்ததாக தனி ஒருவன் 2 படம் உருவாக உள்ளது. இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகி இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் பிரதர், ஜீனி ஆகிய படக்குழுவினர் அவருக்கு போஸ்டர்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்து உள்ளார்.
ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து இருக்கிறது. ஆவலுடன் இப்படத்தை காண ரசிகர்கள் காத்து உள்ளனர். இந்நிலையில் இன்று ஜெயம் ரவி பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு இருக்கிறது படக்குழு. வீடியோ ஜெயம் ரவி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
Embed Video Credits : T SERIES TAMIL