Categories: சினிமா

இந்தியன் 2வில் இருந்து விலகி விட்டேனா? யாருயா சொன்னது? நெத்தியடி பதில் கொடுத்த காஜல்

வெளியிட்டது

காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் இருந்து விலகி விட்டார் என்று வதந்திகள் பரவி வந்த நிலையில், அவர் தான் விலகவில்லை, மீண்டும் இந்தியன் 2 படத்தில் நடிக்க இருப்பதாக அவரே பேசியிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் தான் விக்ரம். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. உலகம் முழுவதிலும் சுமார் 400 கோடிக்கும் மேல் வசூலை குவித்து இருந்தது. இதனால் இயக்குனர் சங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதற்கு கமலஹாசன் ஆர்வம் காட்டியதாக தெரிகிறது. படப்பிடிப்பில் கிரேனில் இருந்து விழுந்து ஒருவர் இறந்து விட, மேலும் இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையான மோதல் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே போனது.

இந்தியன் 2வில் இருந்து விலகி விட்டேனா? யாருயா சொன்னது? நெத்தியடி பதில் கொடுத்த காஜல் 1

முதலில் இந்த படத்தில் நடிகை காஜல் காஜல் அகர்வால் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் இந்த படத்தில் நடிக்க மாட்டார் என்றும், படத்தை விட்டு விலகி விட்டார் என்றும் தொடர்ந்து தகவல்கள் பரவின. காஜல் அகர்வாலுக்கு பதிலாக தீபிகா படுகோன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து இருந்தன. ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகமல் இருந்தது. நடிகை காஜல் அகர்வால் இது பற்றி எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில் இன்று அவர் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தான் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்புக்கு திரும்ப உள்ளதாக கூறியிருக்கிறார்.

இந்தியன் 2 படத்தில் ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சித்தார்த் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் தற்போது ஷங்கர் தெலுங்கு உலகின் முன்னணி நடிகரான ராம்சரனுடன் RC15 படத்தை இயக்கி வருகிறார். இந்த படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதால், இந்த படப்பிடிப்புகள் முடிந்த பிறகு செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதையே காஜல் அகர்வாலும் உறுதி செய்துள்ளார்.  இதனால் கமலஹாசன் ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியாக உள்ளனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்