தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரின் 22வது படமான மாவீரன் படத்தின் பட பூஜை தொடங்கியுள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு முன்பே ஜோடி நம்பர் 1 இல் பங்கேற்று ஆடி டைட்டிலையும் வென்றுள்ளார். பின்னர் மெரினா என்ற படத்தின் மூலமாக திரைத்துறையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் டான். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அயலான், பிரின்ஸ் போன்ற படங்கள் வெளிவர உள்ளன.

தற்போது சிவகார்த்திகேயன் மடோனா அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கான டைட்டில் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. மாவீரன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சிவகார்த்திகேயனின் 22 ஆவது திரைப்படம் ஆகும். இந்த படத்தை ஷாந்தி டாக்கீஸ் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. அதில் இயக்குனர் ஷங்கரும் கலந்து கொண்டார். இவரின் 22வது படமான மாவீரன் படத்தின் பட பூஜை தொடங்கியுள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
