சாண்டியின் பிள்ளைகளை பார்க்க வந்த முன்னாள் மனைவி.! அழகிய புகைப்படங்களை பதிவிட்ட காஜல்

வெளியிட்டது

பிரபல நடன இயக்குனராக இருக்கும் சாண்டியின் முன்னாள் மனைவி தற்போது சாண்டியின் இல்லத்திற்கு வந்து அவரது குழந்தைகளை கொஞ்சி அந்த புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். சன்மியூசிக்கில் தொகுப்பாளனியாக வேலை பார்த்து வந்தவர் நடிகை காஜல். இவர் பிரபல நடன இயக்குனர் சாண்டியின் முதல் மனைவி ஆவார். சாண்டி முதலில் மானாட மயிலாட என்கிற நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர். பின்னர் இவர் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு புகழ்பெற்றார். இவருக்கும் காதல் பசுபதிக்கும் முதலில் திருமணம் நடைபெற்றது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் காஜல் தனியாக வாழ்ந்து வருகிறார். சாண்டி சில்வியா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

சாண்டியின் பிள்ளைகளை பார்க்க வந்த முன்னாள் மனைவி.! அழகிய புகைப்படங்களை பதிவிட்ட காஜல் 1

சாண்டிக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள். முதல் குழந்தை பெயர் லாலா. இரண்டாவது குழந்தை பெயர் சாம் மைக்கேல். இந்த இரண்டு குழந்தைகள் மீதும் சாண்டி மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். பிக்பாஸில் இருந்தபோது தனது மூத்த மகள் லாலாவை பிரிந்திருந்தார். அப்போது அந்த குழந்தை பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பொழுது சாண்டியை ஓடி வந்து கட்டி பிடித்தது. அந்த நிகழ்வு பலரையும் பெரிதும் கண் கலங்க வைத்திருந்தது. இந்த நிலையில் நேற்று காஜல் சான்டியின் இல்லத்திற்கு சென்று அவரது குழந்தைகளுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். சாண்டியும் காஜலும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் இருவருக்குள்ளும் நல்ல நட்பு நீடித்து வருகிறது.

காஜல் பசுபதியும் சாண்டியின் இரண்டாவது மனைவி சில்வியா மீதும் மற்றும் குழந்தைகளிடம் பாசமாக இருந்து வருகிறார். அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் இவர்கள் இரண்டாவது குழந்தை பிறந்த பின்னர் சந்திக்கவில்லை. இதனால் சாண்டியின் இரண்டாவது மகன் சாம் மைக்லை பார்ப்பதற்காக சாண்டியின் இல்லத்திற்கு காஜல் சென்றிருந்தார். அந்த புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் காஜல் பதிவிட்டிருந்தார் அந்தப் புகைப்படங்கள். தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்