தன்னுடைய அடுத்தப்படத்தின் ஹீரோவை தேர்ந்தெடுத்த ராம்! வெற்றிபெறுமா இந்த கூட்டணி?

இயக்குனர் ராம்குமார் கற்றது தமிழ் என்ற படத்தை இயக்கி தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் இவர் இயக்கிய தங்க மின்கள் திரைப்படம் மூன்று தேசிய விருது பெற்றது. அதன் பிறகு 2017இல் இவர் இயக்கிய தரமணி எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றியை தேடி தரவில்லை. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி அஞ்சலி ஆகியோர் நடித்த பேரன்பு திரைப்படம் வெளியானது.

தன்னுடைய அடுத்தப்படத்தின் ஹீரோவை தேர்ந்தெடுத்த ராம்! வெற்றிபெறுமா இந்த கூட்டணி? 1

இவர் இயக்குணம் மட்டுமல்ல ஒரு சிறந்த நடிகர் என்பதையும் தங்க மின்கள், சவரகத்தி, சைக்கோ ஆகிய படங்களில் நடித்து காட்டினார். இந்நிலையில் தற்போது ராம் தன்னுடைய அடுத்த படத்தில் இந்த நடிகரை தான் நடிக்க வைக்க போகிறார் என்ற செய்தி இணையத்தில் கசிந்துள்ளது. அது வேறு யாரும் இல்லை நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தான். ஆர்.ஜே. வாக பணியாற்றி வந்த பாலாஜி, சுந்தர் சி இயக்கத்தில் தீயா வேல செய்யணும் குமாரு திரைப்படம் மூலம் வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  Airportல் style ஆக நடந்து சென்ற தளபதி விஜய்! viral video
தன்னுடைய அடுத்தப்படத்தின் ஹீரோவை தேர்ந்தெடுத்த ராம்! வெற்றிபெறுமா இந்த கூட்டணி? 3

அதன் பிறகு நடித்த நானும் ரவுடி தான் திரைப்படம் பாலாஜி ஒரு சிறந்த காமெடி நடிகராய் வெளிக்காட்டியது. இதை தொடர்ந்து, எல் .கே ஜி , மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஆர்.ஜே பாலாஜியின் வேறொரு அவதாரத்தை வெளிக்காட்டியது. இந்நிலையில் தற்போது இயக்குனர் ராம் பாலாஜியை வைத்து தன்னுடைய அடுத்த படம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டணி அமைந்தால் நிச்சயமாக தமிழ் சினிமா ஒரு புதிய வெற்றிப்படத்தை பார்க்கலாம்.

தன்னுடைய அடுத்தப்படத்தின் ஹீரோவை தேர்ந்தெடுத்த ராம்! வெற்றிபெறுமா இந்த கூட்டணி? 5
விளம்பரம்

Leave a Comment