பிரபல நடிகை காஜல் பசுபதிக்கு இரண்டாவதாக திருமணம் முடிந்து விட்டதாக அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். பலரும் காஜல் பசுபதின் இரண்டாவது திருமணத்திற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தமிழ் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து பிரபலமானவர் காஜல் பசுபதி. பிரபல நடன நிகழ்ச்சியான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அதன் பின்னர் இவருக்கு ‘வசூல்ராஜா’, ‘டிஸ்யூம்’, ‘கோ’, ‘கலகலப்பு 2’ ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் பிக் பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டார்.

‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் போது இவருக்கு நடன இயக்குனரான சாண்டி மாஸ்டருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக அறிவித்திருந்தனர். காதலை பிரிந்த பின்பு சாண்டி வேறொரு திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார். காஜலும் தனியாக வசித்து வருகிறார். அவ்வப்போது தனது முதல் கணவரான சாண்டியின் குடும்பத்தினரை சென்று சந்தித்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் காஜல், ஃபோட்டோ ஷூட்டுகளை செய்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் அவர் தனக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டது என்று சொல்லி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார். மேலும், “நீங்கள் அனைவரும் எனது திருமணத்தால் சந்தோஷமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். என்னை மன்னித்து விடுங்கள் நண்பர்களே. திடீரென முடிவு செய்ததால் யாருக்கும் சொல்ல முடியவில்லை, அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று சொல்லி பதவிட்டு இருக்கிறார். அவரின் இந்த பதிவிற்கு கீழே நிஜமாக இரண்டாம் திருமணம் செய்து விட்டீர்களா? அல்லது பழைய புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறீர்களா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Instagram Source: Kaajal Pasupathi Official