சினிமாவிற்கு டாட்டா காட்டிய காஜல் அகர்வால்! என்ன காரணம் தெரியுமா?

வெளியிட்டது

தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் காஜல் அகர்வால். அவரது மென்மையமான நடிப்பும், அழகான தோற்றமும் , மக்களுக்கு பிடித்ததால் ரசிகர்கள் குவிந்தனர். அவருக்கு சமீபத்தில் தனது நீண்டநாள் நண்பரான கௌதம் கிச்லக்வுடன் மும்பையில் திருமணம் நடைபெற்றது. மும்பையில் பிறந்து வளர்ந்த காஜல் அகர்வால் 2004ல் திரைத்துறையில் தடம் பதித்தார். பின்பு, 2009ல் வெளியான எஸ்.எஸ்.ராஜமௌளி இயக்கிய ‘மகதீரா’ எனும் படத்தின் மூலம் அவர் புகழ் உச்சத்தை அடைந்தது.

சினிமாவிற்கு டாட்டா காட்டிய காஜல் அகர்வால்! என்ன காரணம் தெரியுமா? 1

நிறைய தெலுங்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இதன்காரணமாக தமிழ்பட வாய்ப்புகளும் வர தொடங்கின. கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் கநாநாயகியாக வலம் வந்தார். காஜல் அகர்வால் முன்னணி கதாநாயகர்களான பிரபாஸ், ராம்சரண், அல்லு அர்ஜுன், போன்ற தெலுங்கு நட்ச்சத்திரங்களோடும், தமிழ் திரையுலகில் விஜய்யுடன் 3 திரைப்படங்களிலும் , விஷால், பரத், தனுஷ் ,சூர்யா, கார்த்தி போன்ற டாப் ஸ்டார்ஸுடன் இணைந்து தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

பொதுவாக கதாநாயகிகள் திருமணம் ஆகிவிட்டால் மார்க்கெட் இழந்து படவாய்ப்பை இழப்பர். ஆனால், இந்த காலத்தில் திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் தனது உடலை அழகாக வைத்து கொண்டால் படவாய்ப்புகள் குவியும். அதேப்போல், காஜல் அகர்வாலுக்கும் படவாய்ப்புகள் வந்து கொண்டே தான் உள்ளன. ஆனால், அவர் தற்போது எந்த படத்திலும் நடக்கபோவதில்லை என்று சொல்கிறாராம். அவரது கணவருடைய பிசினஸில் ஈடுபடபோவதாக சொல்லப்படுகிறது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்