திரும்பவும் அதே Director கூடவா? விஜய் சேதுபதியோடு 5வது முறை கைகோர்க்கும் பிரபல இயக்குனர்

விஜய் சேதுபதி தமிழ் திரையுலகில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர். அவருடைய ரசிகர்களிடமும் மக்களிடமும் மிக எளிமையாக பழகக்கூடியவர். இதனால் அவரை ‘மக்கள் செல்வன்’ என்ற பெயரால் செல்லமாக அழைக்கப்படுகிறார். இவர் ஹீரோவாக நடிப்பது மட்டும் இல்லாமல் பல குணச்சித்திர வேடங்களிலும், பாடகராகவும், வசனங்கள் எழுதுபவராகவும் தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தனது கால்ஷீட்டை பிஸியாகவே வைத்துகொண்டிருக்கிரார்.

திரும்பவும் அதே Director கூடவா? விஜய் சேதுபதியோடு 5வது முறை கைகோர்க்கும் பிரபல இயக்குனர் 1

தமிழ் திரைத்துரை மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைத்துறையிலும் கலக்கிகொண்டிருக்கிறார். தற்போது துக்லக் தர்பார் என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார், அந்த திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. கடைசி விவசாயி எனும் படம் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெறுகிறது. மேலும் சில படங்கள் ‘லாபம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ , ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ போன்ற படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். விஜய் சேதுபதியின் முதல் படமான தென்மேற்கு பருவக்காற்று மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

விளம்பரம்
திரும்பவும் அதே Director கூடவா? விஜய் சேதுபதியோடு 5வது முறை கைகோர்க்கும் பிரபல இயக்குனர் 3

ஹீரோவாக முதல் பட வாய்ப்பை தந்த சீனு ராமசாமியுடன் இணைந்து தர்மதுரை படத்திலும் அசத்தினார். இவர்கள் கூட்டணியில் மாமனிதன் படம் ரிலீஸாக தயாரகி கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தயாரிப்பில், 5வது முறையாக விஜய் சேதுபதி, சீனு ராமசாமியின் மீண்டும் மற்றொரு படத்தில் இணைய உள்ளார். அசுரன், கர்ணன் படங்களைப் போன்ற பாணியில் இப்படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எனினும், அதிகாரபூர்வ தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

தொடர்புடையவை  இத மட்டும் நீங்க பைனல்-ல பண்ணி இருந்தா நீங்கதான் வின்னர்.. முதல் பைனலிஸ்ட் யாரு? வெளியான புது ப்ரோமோ
திரும்பவும் அதே Director கூடவா? விஜய் சேதுபதியோடு 5வது முறை கைகோர்க்கும் பிரபல இயக்குனர் 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment