ஆர்யா மற்றும் விஷால் இனைந்து மிரட்டும் “Enemy” படத்தின் டீசர் அப்டேட்!

நடிகர் விஷால் மற்றும் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னனி கதாநாயகர்களாக விலங்குகின்றனர். இவர்களுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்திற்கான அப்டேட்ஸை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிற்கும் ரசிகர்களுக்கு இன்பச்செய்தி கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் நெருங்கிய நண்பர்களான ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடிக்கும் படம் ‘எனிமி’. இந்த படத்தை இயக்குனர் ஆனந் ஷங்கர் இயக்குகிறார்.

ஆர்யா மற்றும் விஷால் இனைந்து மிரட்டும் "Enemy" படத்தின் டீசர் அப்டேட்! 1

இந்த திரைப்படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். எனிமி படத்தின் இசையமைப்பாளர் தமன். எனிமி படத்தில் விஷால், ஆர்யாவுடன் இனைந்து மிருனாலினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் விஷால் ஹீரோவாகவும் ஆர்யா வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷாலுக்கு ஜோடியாக மிருனாலினி ரவி, ஆர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளனர்.

விளம்பரம்
ஆர்யா மற்றும் விஷால் இனைந்து மிரட்டும் "Enemy" படத்தின் டீசர் அப்டேட்! 3

படப்பிடிப்பு லன்டனிலும் சென்னையிலும் 95 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் டீசரை இணையதளத்தில் வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எனிமி படத்தின் டீசர் ஜூன் 20ல் வெளியிடப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளது. விஷால் ஆர்யா கூட்டணியில் உருவாகும் எனிமி படத்தின் டீசருக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் தயாராகின்றனர்.

தொடர்புடையவை  "எனக்கு வேற வழி தெரில ஆத்தா!" நெல்சன் உடம்போடு தன் தலையை Photoshop செய்துகொண்ட விக்னேஷ் சிவன்
ஆர்யா மற்றும் விஷால் இனைந்து மிரட்டும் "Enemy" படத்தின் டீசர் அப்டேட்! 5
விளம்பரம்

Leave a Comment