பாபநாசம் 2வில் இவர் தான் ஹீரோயின்! கௌதமி இல்லையாம்

திரிஷ்யம்-2 ன் வெற்றியை தொடர்ந்து தமிழில் பாபநாசம்-2 எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் முதல் பாகத்தில் நடித்த நடிகை கௌதமிக்கு பதிலாக மற்றொரு நடிகையை படக்குழு நாடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் ஒடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற மளையாள திரைபடம் திரிஷ்யம்-2. இது 2013ல் வெளியான தரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இயக்கினார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.

பாபநாசம் 2வில் இவர் தான் ஹீரோயின்! கௌதமி இல்லையாம் 1


மலையாளத்தின் திரிஷ்யம் படம் பல மொழிகளில் ரீமேக் செய்யபட்டது. இதை தமிழிலும் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கினார். இதில் கமல் ஹாசன், கௌதமி, நிவேதா தமஸ், ஆஷா ஷரத், எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் பலர் நடித்திருந்தனர். தமிழில் பாபநாசம் என்று பெயரிட்டனர், திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. பாபநாசம் முதல் பாகத்தை தயாரித்த ஸ்ரீபிரியா, இரண்டாம் பாகத்தையும் தயாரிப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  எப்படில்லாம் யோசிக்குறானுங்க"!!"இவுங்களே வெச்சே விஜய் டிவி இன்னும் ஒரு வருஷம் ஓட்டுவாங்க போல...."!!
பாபநாசம் 2வில் இவர் தான் ஹீரோயின்! கௌதமி இல்லையாம் 3

நடிகர் கமல் ஹாசன் அரசியளில் ஆர்வம் செலுத்தி வருவதால், பாபநாசம் இரண்டாம் பாகத்திலும் நடிக்க வைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை மீனாவை கமலுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க அழைப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் படக்குவினரால் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை, இருப்பினும் 1996ல் வெளியான ‘அவ்வை க்ஷன்முகி’ படத்திற்கு பிறகு கமல்-மீனா ஜோடியை திரைபடத்தில் காண ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பாபநாசம் 2வில் இவர் தான் ஹீரோயின்! கௌதமி இல்லையாம் 5
விளம்பரம்

Leave a Comment