டுவிட்டரில் மக்கள் தனக்கு விரும்பமானவற்றை ட்ரெண்டாக்க பல பதிவுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று #ஹேஷ்டக் நாள் என்பதால் டுவிட்டர் இந்தியா இந்த 2021 வருடத்தின் முதல் பாதியில் அதாவது ஐனவரி 1 முதல் ஜூன் 30 வரை இருக்கும் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட முதல் பத்து ஹேஷ்டகளை வெளியிட்டுள்ளது.

அதில் முதல் இரண்டு இடங்களை தன் வசம் ஆக்கியது ‘வலிமை’ மற்றும் ‘மாஸ்டர்’. இயக்குனர் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் #வலிமை பல முறை ட்வீட் செய்யப்பட்டதால் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவதாக இந்த ஆண்டில் தளபதி விஜய் மற்றும் மாளவிகா மோஹன் நடிப்பில் வெளிவந்த ‘#மாஸ்டர்’ படம். செம ஹிட் கொடுத்த இப்படத்தை இயக்கியவர் லோகேஷ்.

பின்பு #சர்க்கருவாரிபாடா தொடர்ந்து #அஜித்குமார் மற்றும் #தளபதி65 ட்ரெண்டாகி விட்டது. #கோவிட்19 ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தளபதியின் மாஸ்டர் படத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது வலிமை ஹாஷ்டக். இதை தொடர்ந்து தல ரசிகர்கள் #AjithkumarVALIMAITopsTwitter என்ற ஹாஷ்டகை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
