Categories: சினிமா

மீனா என்கிட்ட பொய் சொல்லிட்டா.. கண்கலங்கிய கலா.. ஆனா மீனா செய்த நெகிழ்ச்சி செயல்.!

வெளியிட்டது

மீனா என்னிடம் பொய் சொல்லிவிட்டார் என்று கலா மாஸ்டர் பதிவிட்டுள்ள போஸ்ட் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது நடிகை மீனாவும் கலா மாஸ்டரும் நெருங்கிய தோழிகள் என்று நம்மில் பலருக்கும் தெரியும். கலா மாஸ்டரை தெரியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு நடனத்தில் மிகப் பிரபலமாக இருப்பவர். ஆரம்பத்தில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற பின்பு இவர் மிகப் பிரபலமானார். மீனா என்கிட்ட பொய் சொல்லிட்டா.. கண்கலங்கிய கலா.. ஆனா மீனா செய்த நெகிழ்ச்சி செயல்.! 1

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியில் கூட சில படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் கலா. இவர் சமீபமாக அதிகமாக பேசப்பட்டு வருவது மீனாவின் கணவர் இறந்தபோது மீனாவிற்கு உறுதுணையாக இருந்தது தான். மீனா கணவர் இறந்தது முதல் கடைசியில் மயானம் வரை மீனா உடனையே இருந்து அவரை கவனமாக பார்த்துக் கொண்டார் கலா மாஸ்டர்.

இதைப் பார்த்த பலரும் கலா மாஸ்டரை வெகுவாக பாராட்டினர். நட்பு என்றால் உங்களைப் போல் தான் இருக்க வேண்டும் என்று கலா மாஸ்டருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் .ஒரு தோழியாக எவ்வளவு தோள் கொடுக்க முடியுமோ அவ்வளவு தூரம் மீனாவிற்கு உறுதுணையாக இருந்தார் கலா. மேலும் மீனாவையும் அவரது மகள் நைனிகாவையும் தானே தத்தெடுப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார். இதனால் கலா மாஸ்டர் மீதான மதிப்பு மேலும் கூடியது. இந்த நிலையில் கலா மாஸ்டர் திடீரென இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், மீனா தன்னிடம் பொய் சொல்லி விட்டார் என்று ஒரு பதிவை வெளியிட்டு கண்கலங்கி இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தனது திருமண நாளிற்கு வீட்டிற்கு வருமாறு மீனாவை அழைத்துள்ளார் கலா மாஸ்டர். ஆனால் மீனா தான் வெளியூருக்கு செல்ல இருப்பதால் ஊரில் இருக்க மாட்டேன் என்று கலா வீட்டிற்கு வர மறுத்திருக்கிறார். ஆனால் யாருக்கும் தெரியாமல் சர்ப்ரைஸ் ஆக திருமண நாளிற்கு கலா வீட்டிற்க்கே வந்து வாழ்த்தி இருக்கிறார் மீனா. இதனால் நெகிழ்ந்து போன கலா மாஸ்டர் சந்தோஷத்தில் கண்கலங்கி இருந்தார். இந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து, மீனா தன்னிடம் பொய் சொல்லி விட்டதாக கூறியிருந்தார். மேலும் லவ் யூ மீனா என்றும் பதிவிட்டு இருந்தார். உங்களின் நட்பு இப்படியே தொடர வேண்டும் என்று பலரும் கமெண்டில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்