நடிகர் அசோக் செல்வனுக்கு அடுத்த மாதம் திருமணம்? பிரபல நடிகரின் மகளை மணக்கும் அசோக் செல்வன்.!

நடிகர் அசோக் செல்வனுக்கும் பிரபல தமிழ் நடிகர் மகள் ஒருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது .தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார் நடிகர் அசோக் சொல்வன். எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் தனக்கென தனி ஒரு அடையாளத்துடன் திரைத்துறைக்கு வந்த இவர், பல ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

நடிகர் அசோக் செல்வனுக்கு அடுத்த மாதம் திருமணம்? பிரபல நடிகரின் மகளை மணக்கும் அசோக் செல்வன்.! 1

விளம்பரம்

சூது கவ்வும் என்கிற படத்தின் மூலமாக அறிமுகமான இவருக்கு பின்னர் ஓ மை கடவுளே என்கிற படத்தில் மூலமாக திருப்புமுனையை பெற்றார். இந்த படத்திற்கு பின்னர் பல கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஏற்கனவே பீட்சா 2, தெகிடி, மன்மத லீலை, ஹாஸ்டல், ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் அசோக் செல்வனுக்கு அடுத்த மாதம் திருமணம்? பிரபல நடிகரின் மகளை மணக்கும் அசோக் செல்வன்.! 3
இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த போர் தொழில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் சரத்குமார் உடன் இணைந்து கொண்டு சைக்கோ கொலையாளியை தேடும் இவரின் நடிப்பு பாராட்டுக்குரியதாக இருந்தது. தற்போது பா ரஞ்சித் இயக்கும் ப்ளூ ஸ்டார் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கி வருவதாக தெரிகிறது. மேலும் சபாநாயகன் என்கிற படத்திலும் அசோக் செல்வன் நடித்து வருகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  யப்பா..குஷ்பூவா இது? உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன குஷ்பூ

நடிகர் அசோக் செல்வனுக்கு அடுத்த மாதம் திருமணம்? பிரபல நடிகரின் மகளை மணக்கும் அசோக் செல்வன்.! 5

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும், நடிகரும், அரசியல்வாதியுமான அருண்பாண்டியன் மகளும் இளம் நடிகைமான கீர்த்தி பாண்டியனுக்கும், அசோக் செல்வனுக்கும் வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி திருநெல்வேலி வைத்து திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விளம்பரம்

நடிகர் அசோக் செல்வனுக்கு அடுத்த மாதம் திருமணம்? பிரபல நடிகரின் மகளை மணக்கும் அசோக் செல்வன்.! 7

சில நாட்களாகவே இருவரும் காதலித்து வருவதாக இணையத்தில் தகவல்கள் உலா வரும் நிலையில் தற்போது இந்த தகவல் தீவிரமடைந்து இருக்கிறது. இது காதல் திருமணமாக அல்லது பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணமா? என்பது குறித்து இன்னமும் தகவல் வெளியாகாமல் இருக்கிறது. திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே என்று இருக்கும் நிலையில் திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

விளம்பரம்

நடிகர் அசோக் செல்வனுக்கு அடுத்த மாதம் திருமணம்? பிரபல நடிகரின் மகளை மணக்கும் அசோக் செல்வன்.! 9

ஆடி மாதம் நடைபெற்று வருவதால் இந்த மாதம் நிறைவடைந்து ஆவணி தொடக்கத்தில் இவர்கள் இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. அசோக் செல்வன் அல்லது அருண்பாண்டியன் ஆகிய இருவரில் ஒருவர் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது..!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment