Categories: சினிமா

ரஜினி, நெல்சன், அனிருத் மட்டுமில்ல, படத்தில் பணியாற்றிய 400 பேருக்கு gift கொடுத்த கலாநிதி மாறன்!

வெளியிட்டது

ஜெயிலர் படத்தில் நடித்த நடிகர்கள் இயக்குனர், இசையமைப்பாளர் என அனைவருக்கும் வாரி வழங்கிய கலாநிதி மாறன் படத்தின் வெற்றிக்குப் பங்காற்றிய படக்குழுவினர் பலருக்கும் தற்போது பரிசு ஒன்றை வழங்கியிருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினி, நெல்சன், அனிருத் மட்டுமில்ல, படத்தில் பணியாற்றிய 400 பேருக்கு gift கொடுத்த கலாநிதி மாறன்! 1

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், யோகி பாபு, மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், சுனில், தமன்னா என பலர் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் ஜெயிலர்.


சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியான முதல் வாரத்திலேயே சுமார் 100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்று மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

படம் வெளியாகி 20 நாள் முடிவில் சுமார் 600 கோடி வசூலை வாரி கொடுத்து இருந்ததால் படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வந்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சுமார் 60 லட்சமும், ஏழைகளின் மருத்துவ செலவிற்காக ஒரு கோடியை அப்பல்லோவிற்கும் வழங்கி இருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

தொடர்ந்து ரஜினிகாந்த்க்கு காசோலையும் பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 ரக காரையும் பரிசாக வழங்கியிருந்தார்கள். அதேபோல இயக்குனர் நெல்சனுக்கு காசோலையும் போர்சே ரக காரையும் வழங்கியிருந்தார்கள்.

படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அனிருத்துக்கும் ஏதாவது பரிசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் அவருக்கும் காசோலையும் உயர் ரக காரும் பரிசாக வழங்கப்பட்டது.

இன்று ஜெயிலர் படத்தின் வெற்றி விழா மற்றும் சக்சஸ் மீட் ஆகியவை இன்று கொண்டாடப்பட்டிருக்கிறது. அதில் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ஜெயிலர் என்று பொறிக்கப்பட்ட தங்க நாணயங்களை பரிசாக வழங்கி அசத்தியிருக்கின்றனர் படக் குழுவினர். விநாயகர் சதுர்த்தி அன்று இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.!

Youtube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்