கடைசி 30 நிமிஷம் பயங்கரமா அழுதேன்.! டான் படத்தை பற்றி சிவாவிடம் போனில் பேசிய சூப்பர்ஸ்டார்

டான் படம் கடந்த வாரம் வெளியாகி மக்களின் அமோக வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிவகார்த்திகேயனுக்கு போன் போட்டு பேசியுள்ளார். அந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் தான் டான். இந்த படத்தை புதுமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கயிருத்தார். கடந்த வாரத்தில் மட்டும் கோடிக்கணக்கான அளவில் வசூலை குவித்து இருந்தது இந்த படம்.

கடைசி 30 நிமிஷம் பயங்கரமா அழுதேன்.! டான் படத்தை பற்றி சிவாவிடம் போனில் பேசிய சூப்பர்ஸ்டார் 1

விளம்பரம்

படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாகம் மிகவும் நன்றாக இருந்தது என பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர். குறிப்பாக கடைசி 30 நிமிடங்கள் பார்க்கும் ரசிகர்களை அழ வைத்து இருப்பார் சிவகார்த்திகேயன். சிவாவுடன் நடித்த நடிகர்கள் கூறும் பொழுது அவர் இந்த காட்சிகளில் நடிக்கும் பொழுது உண்மையாக அழுதார் என்று கூறினார். தன் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட சிவா இந்த காட்சிகளில் நடிக்கும் போது தனது தந்தையுடனான நினைவுகள் வந்ததாக மேடையில் பேசும் போது கண்கலங்க கூறினார். அப்பா இல்லாத பலரும் இந்த காட்சிகளைப் பார்த்து கண்கலங்கினர் என்பது மறுக்கமுடியாத உண்மை. Youtube Video Code Embed Credits: Behindwoods Tv

கடைசி 30 நிமிஷம் பயங்கரமா அழுதேன்.! டான் படத்தை பற்றி சிவாவிடம் போனில் பேசிய சூப்பர்ஸ்டார் 3

விளம்பரம்

இதையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் தற்போது கூறியுள்ளார். டான் படத்தைப் பார்த்துவிட்டு சிவாவிற்கு போன் செய்த சூப்பர் ஸ்டார், கடைசி 30 நிமிடங்கள் என்னையும் மீறி பயங்கரகமாக அழ வைத்துவிட்டாய் என்று சிவாவிடம் கூறியுள்ளார். அதனால் நெகிழ்ந்து போயுள்ளார் சிவா. அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below Video..

தொடர்புடையவை  "சாய் பல்லவியுடன் மீண்டும் இணையும் சூர்யா"!!"படத்தில் ஜோதிகாவும் இணைகிறார்"!!"அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள 2டி நிறுவனம்!!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment