விக்ரம் படத்தில் நடித்தன் மூலம் தனக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து நெகிழ்ந்து போய் இருக்கிறார் நடிகர் சூர்யா. விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். சில நிமிடங்கள் மட்டுமே தோன்றியிருந்தாலும் பெரும் வரவேற்பை பெற்று இருகலகிறார் சூர்யா. தான் ஒரு நல்ல நடிகன் என்பதை மீண்டும் ஒரு முறை ஆணித்தரமாக நிரூபித்துள்ளார் சூர்யா. நான்கு ஆண்டுகளுக்கப் பிறகு கமல் நடிப்பில் வெளியாகியுள்ளது விக்ரம் திரைப்படம். மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய முன்று ஹாட்ரிக் படங்களை கொடுத்த லோகேஷ் இந்த படத்தை எடுத்து இருந்தார். இந்த படத்தை கமலின் சொந்த நிறுவனமான ராஜ் கமல் இன்டர்னேஷனல் நிறுவனமே தயாரித்து இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று விக்ரம் படம் வெளியாகி இருந்தது. அதிகாலை 4 மணிக்கே திரையிடப்பட்டதால் இரவு முதலே ரசிகர்கள் குவியத் தொடங்கினர். படம் எதிர்பார்த்தை விட சக்கை போடு போட்டு வருகிறது. உலகத்தரத்தில் இருப்பதாகவும், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் போன்றவர்கள் நடிப்பில் பின்னி எடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் கூறினர். நேற்று மட்டும் 30 கோடிகளுக்கு மேல் வசூலாகி உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. வாரம் இறுதி நாட்கள் என்பதால் இந்த வாரமே உலக அளவில் வசூல் 100 கோடியை எட்டும் என ரசிகர்கள் மகிழ்ச்சியாக கூறி வருகின்றனர். இந்த படத்தின் முக்கிய பலமாக பார்க்கப்படுவது கமலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதோ அதே அளவிற்கு ஃபகத், விஜய் சேதுபதி, சூர்யாவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது தான்.
இந்த நிலையில் சூர்யா கமலுக்கு நன்றி சொல்லி ஒரு ட்வீட் ஒன்றைப் போட்டுள்ளார். அதில், டியரஸ்ட் கமல் அண்ணா, எப்படி சொல்றது? உங்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற கனவு இன்று நனவாகியுள்ளது. இதை செய்து கொடுத்த லோகேஷுக்கு நன்றி, என் மேல் காட்டப்படும் இந்த அன்பை பார்த்து நெகிழ்ந்து போகிறேன் என பதிவிட்டு இருந்தார். அதற்கு பதில் ட்வீட் போட்டுள்ள கமல், அன்பு தம்பி சூர்யா, உங்களுக்கே தெரியும் இந்த அன்பு நீண்டகாலமாக இருந்ததுதான், இப்போது அது அதிகரித்துள்ளது, ஆல் தி பெஸ்ட் தம்பி, சாரி “தம்பி சார்”..! என்று கமலஹாசன் பதிவிட்டுள்ளார். கமலை சூர்யா அண்ணா என்று அழைத்ததும், சூர்யாவை தம்பி சார் என்று கமல் பதிலுக்கு அழைத்ததும் இரண்டு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போல் பல முண்ணனி நடிகர்கள் இணைந்து பல ப்ளாக் பஸ்டர் படங்கள் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆவல்..Watch the below video..
Video Courtesy: Little Talks