
இப்போதுள்ள OTT நாம் அனைவரும் நிறைய மொழி படங்களை பார்த்து விடுகிறோம். தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களை தாண்டி உலகளவில் வெளியாகும் பல மொழி படங்களையும், தொடர்களையும் நாம் பார்த்து வருகிறோம். இப்பொது தான் கே.ஜி.எஃப் 2 படம் இங்கு மிக பெரிய அளவில் ஓடி நல்ல வசூலையும் வெற்றியையும் பெற்றுள்ளது. ஆனால் இதனை 7 ஆண்டுகள் முன்பே மலையாள இயக்குனர் ஒருவர் இங்கு செய்து காட்டியுள்ளார். டீஸர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். மலையாள இயக்குனரான இவர் முதல் படத்தில் நடிகர் நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா போன்றோரை வைத்து இயக்கிய படம் “நேரம்”. உண்மையில் இப்பொது துணை நடிகராக சக்கை போடு போடும் நடிகர் பாபிக்கு இதுவே முக்கிய முதல் கதாபாத்திரமாகும். நிவின் பாலி, நஸ்ரியா என பலரும் இந்த படம் முலமே மக்களின் கவனத்தை ஈர்த்தனர். படம் ஓரளவு நல்ல வெற்றியை பெற்றது.
பின்னர் 2015ஆம் ஆண்டு, மீண்டும் நிவின் பாலி நாயகனாக நடிக்க அனுபமா, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என 3 நாயகிகள் அறிமுகமாக மலையாள படமாக சென்னையில் வெளியான படம் ” பிரேமம்”. ஒரு இளைஞனின் 3 பருவத்தில் வரும் காதலை மையமாக கொண்டு எந்தவித அலப்பரையும் இன்றி அழகாக கூறப்பட்ட இந்த படம் சென்னையிலுள்ள தனியார் திரையரங்கில் மட்டும் 250 நாளை தாண்டி மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது.

நிவின் பாலி, அனுபமா, மடோனா இவர்கள் 3 பேர் பெற்ற பெயரை விட சாய் பல்லவி ஒரே படத்தில் சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்து உயர்ந்தார். தமிழ்நாடே படத்தை கொண்டாடி தீர்த்தது. இந்த படம் வேலையகி 7 ஆண்டுகள் ஆனா நிலையில் இப்போது இதன் இயக்குனர் அல்போன்ஸ் தன்னுடைய அடுத்த படத்தை எடுத்து முடித்துள்ளார்.
டைரெக்ஷன், எடிட்டிங், ஸ்டண்ட், விசுவல் எபக்ட்ஸ் என படத்திலுள்ள அனைத்தையும் தானே செய்து இந்த படத்தை இயக்கி முடித்துள்ளார் அல்போன்ஸ். பிரித்விராஜ் சுகுமாரன், நயன்தாரா, ரோஷன் என பலர் நடிக்க இந்த படத்திற்கு ” கோல்ட்” என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், தற்போது இதன் அனைத்து நடிகர்களை கொண்ட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
Video courtesy – MagicFrames