ஆஹா! ரெண்டு பேரும் செம்ம அழகா ஆடுறீங்களே..! அமீர் பாவனியை பாராட்டிய கமல் | BB Jodigal

வெளியிட்டது

விக்ரம் படத்திற்கான ப்ரோமோஷனுக்காக பல விஷயங்களை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக சின்னத்திரையில் நுழைந்து கலக்கி வலுகிறார். முதலில் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டு பாட்டு, நடனம் என அசத்திக் கொண்டிருந்தார். தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். பிபி ஜோடிகள் என்பது பிக்பாஸில் 5 சீசன்களில் கலந்து கொண்டவர்களை வைத்து நடத்தப்படும் நடன நிகழ்ச்சியாகும். பிக்பாஸ் 5 சீசனையும் கமலே தொகுத்து வழங்கியதால் போட்டியாளர்கள் அனைவரும் கமலுக்கு பரீட்சியம் ஆனவர்களே. வீடியோ கீழே உள்ளது.

ஆஹா! ரெண்டு பேரும் செம்ம அழகா ஆடுறீங்களே..! அமீர் பாவனியை பாராட்டிய கமல் | BB Jodigal 1

கமலைப் பொறுத்தவரை திரையுலகில் உச்சத்தில் இருக்கும் ஒருவர். உலகநாயகன், கலைஞானி, ஆண்டவர் என்று அவரது ரசிகர்கள் அவரை செல்லமாக அழைப்பது உண்டு. கமலின் படங்கள் ஹாலிவுட் ரேஞ்சில் இருக்கும். அவரின் பல படங்கள் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்தவர். நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன் முகத் திறமையாளர். தற்போது மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு விக்ரம் படத்தில் நடித்துள்ளார். Youtube Video Code Embed Credits: Vijay Televison

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைப்பில், விஜய் சேதுபதி,சூர்யா போன்ற முண்ணனி நடிகர்கள் நடித்துள்ளனர். படம் ஜூன் 3ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. அனைத்து பணிகளும் முடிந்து தயார் நிலையில் இருப்பதால் ப்ரோமாஷன் பணிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது வைரல் ஜோடிகளான அமீர் பாவனி நடனத்தை வியந்து பார்த்தார். அமீர் பாவனி நீலவானம் பாடலுக்கு ஆட, ரம்யா கிருஷ்ணன் எழுந்து நின்று கைத்தட்டினார். செம்ம க்யூட்டாக ஆடிய அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்