Categories: சினிமா

இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினியை அழைத்த கமல்..வெளியான புது தகவல் | Vikram

வெளியிட்டது

உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் விதமாக அனிருத் இசையமைத்துள்ளார்.

இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினியை அழைத்த கமல்..வெளியான புது தகவல் | Vikram 1

இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் மற்றும் ப்ரோமோ காட்சிகள் மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பத்தல பத்தல பாடல் வெளியானது. வெளியான சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ள இந்த பாடலை கமலே எழுதியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஆண்டவர் போட்ட குத்து சாங் என்று நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். Youtube Video Code Embed Credits: Thanthi Tv

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடக்க உள்ளது. இந்த விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், சூர்யா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் குறித்து நாளை கமல் அதிகாரப்பூர்வமாக செய்தியாளர்களை சந்திப்பார் என கூறப்படுகிறது. மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கமல் படம் வெளியாக உள்ளதால் படத்தின் எதிர்பாரப்பு அதிகமாகியுள்ளது. நண்பனுக்காக இசை வெளியீட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் கலந்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்