உலகநாயகன் கமலை துபாயில் ஒரு சிறுவன் கொஞ்சுவது போல இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. உலக நாயகன் கமல் என்றால் யாருக்குதான் பிடிக்காது. 1960 ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா தொடங்கி இன்று வரை நடித்துக் கொண்டே இருக்கிறார். கலைத்துறைக்கு அவர் கொடுத்துள்ள பங்களிப்பு இன்று வரை யாராலும் இட்டு நிரப்ப முடியாத இடமாகும். நடிப்பது, நடனம், பாடுவது, பாடல் எழுவது, வசனம் எழுதுவது என பன்முகத் திறமையாளர் கமல். இந்திய திரைப்படத் துறையில் மாபெரும் சக்தியாக வலம் வருகிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. தமிழ் மட்டுமில்லால் தெலுங்கு, மலையாளாம், கன்னடம், ஹிந்தி என்று இந்திய மொழிகளில் ஏறக்குறைய அனைத்திலும் ஒரு கலக்கி கலக்கியவர்.

பல திரைப்பட விருதுகள், தேசிய விருதுகள், ஃபிலிம்பேர் விருதுகள், பத்ம பூஷன் என பல விருதுகளுக்கு சொந்தக்காரர். குணா, தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், விருமாண்டி, அன்பே சிவம், வசூல்ராஜா, வேட்டையாடு விளையாடு, பாபநாசம் போன்ற படங்கள் கமலஹாசனின் நடிப்பில் வெளியான அற்புதமான படங்கள். இந்த படங்கள் எல்லாமே கமலின் மகுடத்தில் இருக்கும் வைரக்கற்கள் என்றே சொல்லலாம். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். வித்தியாசமான கதைக்களமும், அதற்கான உழைப்பையும் 100 சதவீதம் வழங்கியதால்தான் இன்று புகழின் உச்சியில் இருக்கிறார். தசாவதாரம் படத்தில் 10 விதமான கெட்டப்புகளை போட்டு அசத்தியிருப்பார்.
இவரை இவரது ரசிகர்கள் “ஆண்டவர்” என்று செல்லமாக அழைப்பது உண்டு. தற்போது அவர் நடித்த விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. இதனால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். ஒவ்வொரு ஊராக சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஒரு புகைப்படம் ஒன்றை தனது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார். அதில் ஒரு சிறுவன் கமலின் நாடியைப் பிடித்து கொஞ்சுவது போன்று இருக்கிறது. விக்ரம் படத்தை பார்த்த அந்த சிறுவன் கமலை நேரில் பார்த்த போது இவர்தானே விக்ரம் என கொஞ்சியுள்ளான். அந்த புகைப்படத்தை பகிர்ந்த கமல் அந்த சிறுவன் என்னை பார்த்து விக்ரம் என சொன்னான், அடுத்த தலைமுறையை கூட கவர்ந்துள்ளை நினைத்து பெருமை கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். செம்ம க்யூட்டாக உள்ள அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the below Video…
Youtube Video Code Embed Credits: A to Z 360