வீடு வீடா போய் சோப்பு வித்து வர காசுல ஒரு வேளைதான் சாப்பிடுறேன்..நடிகை ஐஸ்வர்யாவின் பரிதாப நிலை

சூர்யா நடித்த ஆறு படத்தில் சவுண்டு சரோஜாவாக நடித்தவர் ஐஸ்வர்யா. குளிக்கிற இடத்துக்கு கோழிக்குஞ்சு வருதாடா? என்ற ஒரு டயலாக்கால் புகழ் பெற்றார். இவர் பல பெரும் நடிகை லெட்சுமியின் மகள் ஆவார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உட்பட பல படங்களில் நடித்தார் இவர் கடைசியாக நடித்த படம் அபியும்,நானும். இந்த படத்தில் த்ரிஷாவுக்கு அம்மாவாக நடித்து அசத்தியிருப்பார் ஐஸ்வர்யா. இவருக்கு திருமணம் ஆகி இரண்டே ஆண்டுகளில் விவாகரத்து ஆகியுள்ளது. தனது ஒரு மகளையும் கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

வீடு வீடா போய் சோப்பு வித்து வர காசுல ஒரு வேளைதான் சாப்பிடுறேன்..நடிகை ஐஸ்வர்யாவின் பரிதாப நிலை 1

விளம்பரம்

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய போது மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் ஆரம்பத்தில் தன்னை கதாநாயகியாக நடிக்க மணிரத்னம் கேட்டுள்ளார். ஆனால் தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆனதால் ரோஜா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கை நழுவி போனது. ஆனால் அந்த தெலுங்கு படமும் நின்று போகவே ரோஜா படம் வேற லெவலில் ஹிட் அடித்ததை பார்த்து இந்த படத்தில் நடிக்காமல் போய்விட்டோமே என்று தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்டதாக ஐஸ்வர்யா கூறியிருந்தார்.

தொடர்புடையவை  ரித்திகாவின் திருமண வரவேற்ப்பில் செம்ம ரகளை செய்த பாலா மற்றும் புகழ்.! வெளியான வீடியோ.!

வீடு வீடா போய் சோப்பு வித்து வர காசுல ஒரு வேளைதான் சாப்பிடுறேன்..நடிகை ஐஸ்வர்யாவின் பரிதாப நிலை 3

விளம்பரம்

தற்போது மற்றொரு தனியார் சேனலுக்கு பேட்டி அளித்த அவர் பட வாய்ப்புகள் இல்லை, வீடு வீடாக சென்று சோப்பு விற்றுதான் பிழைக்கிறேன். வீடு வீடாக சென்று விற்பனை செய்வது மிக கடினமாக உள்ளது. இருந்தாலும் என்ன செய்வது நானும் என்னுடைய நான்கு பூனைகளும் சாப்பிட வேண்டுமே? எனக்கு யாராவது நடிக்க வாய்ப்பு தாருங்கள். என் பெண்ணை வளர்த்து திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். எனக்கென்று இப்போது யாரும் இல்லை. உங்கள் கம்பெனியில் பெருக்கி விடும் வேலை இருந்தாலும் கக்கூஸ் கழுவும் வேலை இருந்நாலும் அதை சிறப்பாக செய்வேன் என்று கூறினார். ஒரு காலத்தில் மிகப்பெரிய நடிகையாக இருந்த இவருக்கு இப்படி ஒரு நிலைமையா என்று கமெண்ட் போட்டு வருகின்றனர். Watch the below Video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Galatta Tamil

விளம்பரம்

Leave a Comment