மாடியில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்த ஹேமா.! கதறும் கண்ணம்மா.!

பாரதிகண்ணம்மா சீரியலில் தனது அப்பா யார் என்று தெரியாமல் இருப்பதால் தற்கொலை முடிவு எடுத்திருக்கிறார் ஹேமா. இதனால் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது பாரதி கண்ணம்மா தொடர். பலரும் விரும்பி பார்த்துக் கொண்டிருந்த பாரதி கண்ணம்மா தொடர் தற்போது கிளைமாக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று பாரதி எண்ணிக் கொண்டிருந்த நிலையில், இரண்டு குழந்தைகள் பிறந்ததால் அந்த இரண்டு குழந்தைகளையும் தனது மனைவியையும் சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார் பாரதி. பின்னர் அனைவரும் அந்த இரண்டு குழந்தைகளும் உன்னுடையது தான் என்று பலமுறை சொல்லியும் பாரதி கேட்காமல் இத்தனை நாள் காலம் தாழ்த்தி வந்தார். பிறகு ஒரு வழியாக டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க ஒப்புக்கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாடியில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்த ஹேமா.! கதறும் கண்ணம்மா.! 1

விளம்பரம்

டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்த்ததில் இரு குழந்தைகளும் பாரதியின் குழந்தைகள் தான் என்கிற முடிவுகள் வந்துவிட்டது. இரு குழந்தைகளின் டிஎன்ஏவும் பாரதியும் டிஎன்ஏவுடன் ஒப்பிட்டு போனதால், பாரதி உடைந்து போகிறார். இத்தனை நாள் கண்ணம்மாவையும் குழந்தைகளையும் கஷ்டப்படுத்தி விட்டோமே என்று கதறி அழுகிறார். டெல்லிக்கு சென்று இருக்கும் அவர் சென்னைக்கு வந்து கண்ணம்மாவிடமும் குழந்தைகளிடமும் மன்னிப்பு கேட்டால் இந்த கதை முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இயக்குனர் இன்னும் எத்தனை திருப்பங்களை வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை. அதில் ஒரு திருப்பமாக தற்போது ஹேமா தற்கொலை செய்யும் முடிவை எடுத்திருக்கிறார். தனது தந்தை யார் என்று தெரியாவிட்டால் தான் மாடியில் இருந்து கீழே விழுந்து விடுவேன் என்று மருத்துவமனையின் மாடியில் ஏறி நிற்கிறார்.

தொடர்புடையவை  போட்றா வெடிய! முன்கூட்டியே தொடங்குகிறது பிக்பாஸ் சீசன் 6..எப்போன்னு தெரியுமா? | BiggBoss

மாடியில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்த ஹேமா.! கதறும் கண்ணம்மா.! 3

விளம்பரம்

இதைப் பார்த்த கண்ணம்மா பாரதியின் தாயார், தந்தை என அனைவரும் ஹேமாவை கீழே இறங்கி வந்து விடுமாறு கூச்சல் போட்டு கதறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தந்தை யார் என்று தெரியாமல் நான் கீழே இறங்கப் போவதில்லை என்று ஹேமா விடாப்பிடியாக மேலே நின்று கொண்டிருக்கிறார். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment