Categories: Bigg Boss Tamil 6

மலையாளிகளை ரொம்ப அசிங்க படுத்துறீங்க கமல்.! திடீரென ஷெரினாவுக்கு பெருகும் ஆதரவு.!

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஷெரினாவிற்கு தற்போது திடீரென ஆதரவு பெருகி வருகிறது மலையாளத்தில் அவருடைய பெயர் எழுதிய கார்டை கமல் காட்டியதை குறிப்பிட்டு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி நான்கு வாரங்கள் ஓடிவிட்ட நிலையில் மொத்தம் நான்கு பேர் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். 21 போட்டியாளர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 17 பேராக குறைந்து இருக்கிறது. நேற்று ஷெரினாவை பிக்பாஸில் இருந்து வெளியேற்றி இருந்தனர். நான் தனியாக தானே வந்தேன் தனியாகவே செல்கிறேன் என்று ஹவுஸ் மேட்ஸ் ஒருவரின் முகத்தை கூட பார்க்காமல் நேராக வெளியேறிவிட்டார் ஷெரினா. இதற்குப் பிறகு ஷெரினா மீது பலருக்கும் அனுதாபம் ஏற்பட்டுள்ளது.

மலையாளிகளை ரொம்ப அசிங்க படுத்துறீங்க கமல்.! திடீரென ஷெரினாவுக்கு பெருகும் ஆதரவு.! 1

ஷெரினாவை வெளியேற்றுவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது அவருடைய மொழி பிரச்சனை தான். ஷெரினா கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் என பல மொழிகளை பேசும் புலமை கொண்டவராக இருக்கிறார். ஆனாலும் அவருக்கு தமிழில் பேசுவதற்கு சற்று சிரமம் ஏற்பட்டது. பல நேரங்களில் மற்ற ஹவுஸ் மேட்ஸிடம் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்த அவர், ஆயிஷாவிடம் பேசும் பொழுதெல்லாம் மலையாளத்தில் பேசிக் கொண்டிருந்தார். இதை இரண்டு முறை பிக்பாஸ் கண்டித்தும் தொடர்ந்து அவர் விதிமீறல்களில் ஈடுபட்டிருந்தார். இதை கமலஹாசனை கண்டித்த போதும் தொடர்ந்து இதைப்போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டதால் கமலே ஒரு கட்டத்தில் கோபமாகி நேற்றைய எபிசோடில் திட்டி தீர்த்தார்.

 

தமிழ் சேனலில் சம்பளம் வாங்கிக் கொண்டு தமிழ் ஆடியன்ஸுக்கு துரோகம் செய்யாதீர்கள் என்ற ரீதியில் கமல் பேசியிருந்தார். பின்னர் ஷெரினாவை வெளியேற்றும் போது மலையாளத்தில் அவரது பெயரை எழுதப்பட்ட கார்டை காட்டினார். பின்னர் ஷெரினா அழுது கொண்டு வேகமாக வீட்டிலிருந்து வெளியேறினார். அவர் ஹவுஸ்மேட்ஸ் யாரிடமும் பேசவில்லை. இதை பார்த்த பலருக்கும் ஷெரினா மீது பலருக்கும் அனுதாபம் ஏற்பட்டுள்ளது. மலையாளி என்று தெரிந்து தானே எடுத்தீர்கள்? பிறகு எதற்கு இதுபோல் குத்தி காட்டி அவமானப்படுத்துகிறீர்கள் என்று பிக்பாஸையும் கமலஹாசனையும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்