
இப்போதைய தமிழ் சினிமாவின் ஹாட் நியூஸ் லோகேஷ் கனகராஜின் “விக்ரம்” படம் தான் .கிட்டத்தட்ட நான்கு வருட தவமாக காத்திருந்த கமல் ரசிகர்கள் தற்போது விக்ரம் திரைப்படத்தை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் சக்கைபோடு போட்டது.
இப்போதைய நடிகர்களில் மிகவும் சந்தோசமாக இருக்கும் பல வெற்றி கொண்டாட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வரும் கமல்ஹாசன், நடிகர் கமலஹாசன் தான். 4 ஆண்டுகள் இவர் நடிக்கவில்லை இது மிக பெரிய கம்பேக் என ரசிகர்கள் பொதுவாக கூறினாலும், உண்மையில் தசாவதாரம் படத்திற்கு பிறகு நடிகர் கமல் பெரிய வெற்றியை பெறவில்லை. விஸ்வரூபம் நல்ல வெற்றியை பெற்றபோதிலும் அது ஒரு கமர்சியல் படமாக இல்லாமல் வேறு ஒரு பாணியில் கமல் படமாக்கி வெற்றி கண்டார்.
அந்த போட்டியில் ரஜினி அடுத்தடுத்து பல கமர்சியல் படங்களை அடுத்தடுத்து கொடுத்து மிகவும் முன்னே சென்றார். இன்றைய தலைமுறையும் ஒரு மிக பெரிய கமர்சியல் நாயகனாக இருந்த கமலை கொண்டாட தவறியது. அனைத்திற்கும் முற்றுபுள்ளி வைத்து தமிழ் மட்டுமின்றி தென்னிந்தியாவே கொண்டாடும் படமாக இப்பொது “விக்ரம்” படம் உருவெடுத்துள்ளது. படம் வெளியான இரண்டே வாரங்களில் 400 கோடி வசூலை ஈட்டியுள்ளது
படத்தில் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் மிரட்டியுள்ள கமலிற்கு பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள். உடன் நடித்த விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் மற்றும் கடைசி ஐந்தே நிமிடங்களில் வந்து மொத்த ரசிகர்களையும் தன்னுடைய வில்லதனத்தால் மிரட்டி எடுத்துள்ள சூரியா என அனைவருமே மெச்சும் படி தங்களுடைய பங்களிப்பை அளித்துள்ளனர். அனிருத்தின் இசை, லோகேஷின் நேர்த்தியான கதை அமைப்பு என பாராட்டுகளை குவித்தவண்ணம் உள்ளது படம்.
இதனால் நீண்ட நாட்கள் பிறகு கமலிற்கு இந்த வெற்றி மிக பெரிய ஊக்கத்தை கொடுத்துள்ளது. தன்னுடைய திரைப்பட வேலைகளில் மிகவும் வேகமாக மீண்டும் இறங்கியுள்ளார் அவர். அடுத்து கமலின் கூட்டணியில் மகேஷ் நாராயணன் இயக்கும் படம் உருவாகவுள்ளது. இவர் மலையாளத்தில் நடிகர் பாகத் பாசிலின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த “மாலிக்” படத்தை இயக்கியிருந்தார். அதே போல தன்னிடமுள்ள படங்களை முடித்து விட்டு இயக்குனர் பா.ரஞ்சித் கமலுடன் இணையவுள்ளார் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன. தயாரிப்பு பணிகளையும் கமல் முடிக்கிவிட்டுள்ளார்.
நேற்று சென்னையில் நடிகர் உதயநிதியின் தயாரிப்பு நிறுவனமான “Red giant” நிறுவனத்தின் 15வது வருட சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இதனை வருடங்களில் அந்த நிறுவனத்துடன் பணியாற்றிய, இனி பணியாற்றவுள்ள சில கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நடிகர்கள் கமல், பாலிவுட் நடிகர் அமீர் கான் என சிறப்பு விருதினர்கள் பலர் வந்திருந்தினர்.
அப்போது மேடையில் பேசிய நடிகர் கமல், உதயநிதிக்கு ஒரு surprise கொடுத்துள்ளார். அடுத்தடுத்து தயாரிப்பு பணிகளை துவங்கியுள்ள கமலின் “RKFI” நிறுவனத்தின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க உதயநிதியை ஒப்பந்தம் செய்து அதற்கான அறிவிப்பு போஸ்ட்டரையும் மேடையிலேயே வெளியிட்டுள்ளார் கமல். இப்பொது நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் “ரங்கூன்” பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் படத்தை அந்நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.