நடிகர் தனுஷ் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கள் பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. ‘உன் ஒளியிலே’ என்று தொடங்கும் அந்தப் பாடல் வெளியான சில நிமிடங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்று சாதனை புரிந்து வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்ரன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் ‘கேப்டன் மில்லர்’. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகிய இருவரும் தயாரித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் நடிகைகள் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும் ஜான் கொக்கேன், சுமேஷ் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரலாற்றுப் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில், படம் வருகிற 2024 பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை கபேர் வாசுகி எழுத, ஷான் ரால்டன் பாடியுள்ளார். மெலோடியாக உருவாகியுள்ள அந்த பாடலை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Saregama Tami