ரவீனாவின் அம்மாவை சர்ப்ரைஸாக அழைத்து வந்த பிக்பாஸ் டீம்.! கதறி அழுத ரவீனா.!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைக்கான கடைசி ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ரவீனாவின் தாயாரை சர்ப்ரைஸாகக அழைத்து வந்து பிக் பாஸ் குழுவினர் அதிர்ச்சி கொடுத்துள்ளனர். கடந்த வாரம் நடந்த ப்ரீஸ் டாஸ்க்கில ரவீனாவின் தாயார் மட்டும் உள்ளே வரவில்லை. அவருக்குப் பதிலாக ரவீனா அம்மாவின் தோழியும், ரவீனாவின் சகோதரனும் வந்திருந்தனர். உள்ளே வந்திருந்த அவர்கள் ரவீனாவின் ஆட்டத்தை மிகவும் மோசமாக விமர்சித்திருந்தனர். “எப்பொழுதும் மணியுடன் அமர்ந்து பேசுவது, மணிக்கு ஃபேவரைட்டாக விளையாடுவது என்று உன் கேமை கெடுத்து விட்டாயே” என்று திட்டி தீர்த்து விட்டு சென்றிருந்தனர். இதனால் ரவீனா குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரவீனாவின் அம்மாவை சர்ப்ரைஸாக அழைத்து வந்த பிக்பாஸ் டீம்.! கதறி அழுத ரவீனா.! 1
உறவினர்கள் சொல்லிவிட்டு சென்ற பின்னர் அவர் மணியுடன் பேசுவதை வெகுவாக குறைத்து விட்டார். தற்போது கமலஹாசபிடம் பேசும் ரவீனா தான் மிகுந்த மன குழப்பத்தில் இருப்பதாக கூறுகிறார் உங்கள் குழப்பங்களுக்கு விடை அளிக்கும் ஒரு பொருள் ஸ்டோர் ரூமில் இருப்பதாக கமலஹாசன் கூறுகிறார். அப்போது அனைவரும் சென்று ஸ்டோர் ரூம்மை திறந்து பார்க்கின்றனர் உள்ளே ரவீனாவின் தாயார் நின்று கொண்டிருக்கிறார். அதை பார்த்து ரவீனாவும் அவரது தாயாகவும் கட்டிப்பிடித்து அழத் தொடங்குகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  தனிக்குடித்தனம் செல்வது பற்றி ஜீவா சொன்ன வார்த்தை.! அதிரடி முடிவை எடுத்த ப்ரியா.! ப்ரோமோ உள்ளே.!

ரவீனாவின் அம்மாவை சர்ப்ரைஸாக அழைத்து வந்த பிக்பாஸ் டீம்.! கதறி அழுத ரவீனா.! 3
பின்னர் ரவீனாவுக்கு சாக்லேட் ஊட்டி விடுவது, உணவு ஊட்டி விடுவது என்று நெகிழ்ச்சியாக அந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment