“இந்த படம் ரொம்ப கண்றாவியா இருக்கு”.! ‘சலார்’ படத்தை கழுவி கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்.!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நேற்று உலகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் ‘சலார்’. இந்த திரைப்படத்தில் பிரபாஸ், பிருத்திவிராஜ், ஜெகபதிபாபு, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியான முதல் நாளே ரூ.178.7 கோடி வசூலை குவித்து சாதனை படைத்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் படம் குறித்து பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

"இந்த படம் ரொம்ப கண்றாவியா இருக்கு".! 'சலார்' படத்தை கழுவி கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்.! 1

விளம்பரம்

அவர் கூறும் பொழுது, “15 வயது மதிக்கத்தக்க இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்கள் நட்புக்காக எதை வேணாலும் விட்டுக் கொடுக்கிறார்கள். பின்னர் இவர்கள் இருவரும் பிரியும் சூழ்நிலை வருகிறது. ஆனால் பிரியும் பொழுது ஒரு நண்பர் மற்றொரு நண்பரிடம் ஒரு சத்தியம் செய்துவிட்டு செல்கிறார். அதில் உனக்கு ஏதாவது பிரச்சனை வரும்போது சொல், நான் அங்கு வந்து நிற்பேன் என்று அவர் கூறுகிறார். அதே போல அவருக்கு பிரச்சனை வரும்போது இன்னொரு நண்பர் வருகிறார்இந்த படம் கேஜிஎஃப் ஒன்று மற்றும் இரண்டு போல இருக்காது என்று இயக்குனர் கூறியிருந்தார். ஆம் அதுபோல இல்லை ஆனால் அதே படத்தை தான் திருப்பி எடுத்து வைத்திருக்கிறார்கள். அதை அம்மா சென்டிமென்ட், அதே புழுதி பறக்கும் லொகேஷன், அதே கேமரா ஒர்க், அதே கதை, அதே எடிட்டிங், அதே மியூசிக் என்று திருப்பி கேஜிஎப் படத்தை தான் எடுத்து வைத்திருக்கிறார்கள்.

தொடர்புடையவை  காதல் கணவரை விவாகரத்து செய்யும் சுப்ரமணியபுரம் பட நடிகை ஸ்வாதி.? தீயாய் பரவும் தகவல்.!

"இந்த படம் ரொம்ப கண்றாவியா இருக்கு".! 'சலார்' படத்தை கழுவி கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்.! 3

விளம்பரம்

ஆனால் அந்த படங்களுக்கும், ‘சலார்’ படத்திற்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் அந்தப் படங்கள் பார்க்கிற மாதிரி இருந்தது, இந்த படம் பார்க்கவே முடியாத அளவுக்கு மிக கன்றாவியா இருக்கிறது. படம் ஆரம்பித்து பத்து நிமிடங்களாக வெத்து பில்டப் மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது பாதியில் ஏதோ பதவிக்காக தேர்தல் நடப்பது போல காட்டுகிறார்கள். இது என்ன தேர்தல்? எந்த உலகத்தில் நடக்குது எனவே நமக்கு புரியவில்லை. பதவிக்கு போட்டி போடுபவர்கள் முடிவெட்டாமல், மேல் குளிக்காமல், பத்து நாளாக பல்லு விளக்காதவன் மாதிரி இருக்கிறார்கள். நம்ம ஊரு கவுன்சிலர் கூட மந்திரி மாதிரி ஜம்முனு இருப்பான். ஆனால் ஒரு பதவிக்கு போட்டி போடுகிறவன் குளிக்காதவன் போல இருக்கிறான்.

"இந்த படம் ரொம்ப கண்றாவியா இருக்கு".! 'சலார்' படத்தை கழுவி கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்.! 5

விளம்பரம்

எதிரிகள் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வெட்ட வந்தால் ஹீரோ கோடாரியை எடுத்துக் கொண்டு போய் சண்டை போடுகிறார். சாப்பிடும் போது மிளகாய்த்தூள் கலந்து சாப்பிடுகிறார். இதில் நடித்த பிரபாஸ், ஜெகபதிபாபு, ஸ்ருதிஹாசன் ஆகிய அனைவரின் கதாபாத்திரமும் வேஸ்ட். ஒரே ஒரு நல்ல கதாபாத்திரம் பிரித்திவிராஜ். அதையும் கெடுத்துவிட்டார்கள். கேஜிஎஃப் படத்தில் நடித்த யாஷ் பிரமாதமான நடிகர் கிடையாது. ஆனால் அந்த படத்தில் பில்டப் செய்துவிட்டு அதன் பின்னர் வரும் காட்சிகள் எல்லாம் அவர்கள் அவ்வளவு நேரம் கொடுத்த பில்டப்பை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு இருக்கும்.

தொடர்புடையவை  சாதனையா? சோதனையா? கொட்டுக்காளி படத்தின் முழு வசூல் விபரம் இதோ..!

"இந்த படம் ரொம்ப கண்றாவியா இருக்கு".! 'சலார்' படத்தை கழுவி கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்.! 7
ஆனால் இந்த படத்தில் வெறும் வெத்து பில்டப் மட்டும் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காட்சி அமைப்பு ஒன்றுமே சரியில்லை. ஆக மொத்தம் வாழ்க்கையில் மூன்று மணி நேரத்தை வேஸ்ட் செய்து விட்டேன்” எனப்ளூ சட்டை மாறன் விமர்சித்தார். அவரின் அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Tamil Talkies

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment