விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரில் தற்போது மஹாவை சூர்யா கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார்.்அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. கொட்டும் மழையில் மஹா கண்ணீருடன் நின்று கொண்டிருக்கிறார். இனி என்ன நடக்கப் போகிறது? மஹா என்ன முடிவெடுக்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு தற்போது எழுந்திருக்கிறது. ‘ஆஹா கல்யாணம்’ தொடரில் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் சூர்யாவை ஏழை வீட்டுப் பெண்ணாக இருக்கும் மஹா திருமணம் செய்து கொள்கிறார். திருமணமானதிலிருந்து மஹாவை சூர்யாவிற்கும் அவரது அம்மா ராஜலட்சுமிக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சூர்யாவை தனது தாய், தந்தை செய்யும் பொம்மை தொழிலுக்கு அழைத்துச் செல்கிறார் மஹா. இதை விஷமிகள் சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் பரப்புகின்றனர். இது ராஜலட்சுமி கவனத்திற்கும் வருகிறது. அவர் இது குறித்து மஹாவிடம் கேள்வி எழுப்புகிறார். அப்போது மஹா கோபத்தில் ராஜலட்சுமியிடம் சில கேள்விகள் கேட்கிறார். இதை கேட்கும் சூர்யா கோபத்தில் மஹாவை கண்டிக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், மஹா சூர்யாவிடம், “உங்கள் அம்மாவிற்கு நான் திருமணமாகி மருமகள் ஆகி வந்த நாள் முதலே என்னை பிடிக்கவில்லை” என்று கூற, அம்மாவிற்கு மட்டுமல்ல எனக்கும் உன்னை பிடிக்கவில்லை என்று சொல்லி தர தர என இழுத்து வீட்டிலிருந்து மஹாவை சூர்யா வெளியே தள்ளுகிறார்.

வீட்டிலிருந்து வெளியே அனுப்பப்பட்ட மஹா கொட்டும் மழையில் கண்ணீருடன் நின்று கொண்டிருக்கிறார். அவரை யாருமே கண்டு கொள்ளவில்லை. இதனால் மஹா அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television