விக்ரம் படம் பற்றி கமல் கொடுத்த பேட்டியில் பிக்பாஸ் சீசன் 6-ஐ யார் தொகுத்து வழங்க உள்ளனர் என்ற கேள்விக்கு கமலே சூப்பர் பதில் ஒன்றை அளித்துள்ளார். தமிழில் பிக்பாஸ் 5 சீசன்களை கடந்துவிட்டது. ஐந்து சீசன்களையும் கமலே தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வெளியாகும் வண்ணம் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது. இந்த நிலையில் கமல் திடீரென்று அல்டிமேட்டிலிருந்து விலகி அதிர்ச்சி கொடுத்தார். விக்ரம் படத்தின் வேலைகள் இருப்பதால் விலகுகிறேன், மீண்டும் பிக்பாஸ் சீசன் 6-ல் சந்திப்போம் என்று விளக்கமும் அளித்தார். இதனால் சில காலம் பிக்பாஸை சிம்பு தொகுத்து வழங்கினார். ரசிகர்கள் பிக்பாஸ் சீசன் 6 எப்போது வரும் என்ற ஆவலில் இருந்தனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களை மகிழ்வித்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். தற்போது பிக்பாஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஜூலை இரண்டாவது வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் சீசன் 6 தொடங்க உள்ளதாகவும், அதற்கான போட்டியளார்களை தேர்வு செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் கமல் தொகுத்து வழங்குவாரா? இல்லை சிறிது காலம் என்றாலும் அல்டிமேட்டை சிறப்பாக தொகுத்து வழங்கிய சிம்புவே சீசன் 6ஐ தொகுத்து வழங்குவாரா என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளன.
இந்த நிலையில் விக்ரம் படம் வெளியாகி மிக பெரிய வெற்றி அடைந்துள்ளது. நான்கு வருடங்களுக்குப் பின் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால் செம்ம குஷியில் இருக்கிறார் கமல். இதனையடுத்து கமல் இன்று ஒரு ஜாலியான ப்ரஸ் மீட்டை கொடுத்தார். அதில் ரஜினியுடன் இணைவீர்களா என்ற கேள்விக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் இணைவேன் என்று கூறியிருந்தார் கமல். மேலும் பிக்பாஸ் சீசன் 6 குறித்து கமலிடம் கேள்வி கேட்கப்பட்டது.அப்போது பேசிய கமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீசன் 6 ஐ நானே தொகுத்து வழங்குவேன் என்று கூறினார். படத்தில் கவனம் செலுத்த இருப்பதால் இனிமேல் பிக்பாஸுக்கு கமல் வரமாட்டார் என்றும், சிம்பு, சரத்குமார், ரம்யா கிருஷ்ணன் மூவரில் ஒருவர்தான் தொகுத்து வழங்குவார் என யூகங்கள் கிளம்பிய நிலையில் வதந்திகளுக்கு கமல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.