Categories: சினிமா

தேனிகாரனுக்கு இந்த பரமகுடியானின் வாழ்த்துக்கள்.! பாரதிராஜாவை Cute ஆக வாழ்த்திய கமல்

வெளியிட்டது

பாரதிராஜா நலம் பெற்று வீடு திரும்பியதை அடுத்து, கமலஹாசன் அவருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனராக இருப்பவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் இயக்குனர் இமயம் என்றும் அவரது ரசிகர்களால் பாராட்டப்படுகிறார். சில நாட்களாகவே அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. மதுரைக்கு விமான மூலம் சென்ற அவர், விமான நிலையத்திலேயே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சென்னைக்கு திரும்பிய அவருக்கு அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டிருந்தது. வெகு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் பின்னர் வீடு திரும்பினார். அவரது வீட்டிற்க்கே சென்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் கூட நலம் விசாரித்து வந்தார்.

தேனிகாரனுக்கு இந்த பரமகுடியானின் வாழ்த்துக்கள்.! பாரதிராஜாவை Cute ஆக வாழ்த்திய கமல் 1

பின்னர் மீண்டும் உடல்நலம் குன்றிப்போனது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாரதிராஜா. இந்த செய்தி அவரது ரசிகர்கள் பலரிடமும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் சாதாரண காய்ச்சல் தான் அவர் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் நலமுடன் வீடு திரும்பியிருக்கிறார் பாரதிராஜா. அவருக்கு தனது வாழ்த்துக்களை கமலஹாசன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள கமலஹாசன், நலம் பெற்று வீடு திரும்பிய பாரதிராஜா மகிழ்ச்சியான செய்தியை இன்று என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டார்.

மருத்துவமனையில் நலம் விசாரிக்க சென்றபோது ஆஸ்பத்திரியில் உங்களை பார்க்க எனக்கு பிடிக்கவில்லை. சீக்கிரம் வீடு திரும்புங்கள், நான் புறப்படுகிறேன் என்று சொன்னேன். OK See You later for sure, bye என்று ஆங்கிலத்தில் சொல்லி வழி அனுப்பினார். சொன்ன வார்த்தை காப்பாற்றிய என் தேனிக்கார நண்பனுக்கு, இந்த பரமக்குடியானின் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார் கமலஹாசன். கமலஹாசனின் இந்த வாழ்த்தும், அவர் வாழ்த்திய விதமும் பாரதிராஜா ரசிகர்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்