‘அயலான்’ படத்திலிருந்து வெளியான அடுத்த ரொமான்டிக் பாடல்.! “சுரோ சுரோ..” லிரிக்கல் வீடியோ இதோ.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்’ திரைப்படத்திலிருந்து தற்போது “சுரோ சுரோ..” என்கிற பாடலின் வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அது இது எது’ என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். அதற்கு முன்பு மிமிக்ரி கலைஞராகவும், நடன நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்திருக்கிறார். தற்போது இவர் தமிழின் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘டான்’, ‘டாக்டர்’ போன்ற படங்கள் ரூ.100 கோடி வெற்றியை கொடுத்த நிலையில் அந்த வரிசையில் தற்போது ‘அயலான்’ என்கிற படத்திலும் நடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

'அயலான்' படத்திலிருந்து வெளியான அடுத்த ரொமான்டிக் பாடல்.! "சுரோ சுரோ.." லிரிக்கல் வீடியோ இதோ.! 1
இந்தத் திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்தது. மேலும் ஏலியன் சார்ந்த கதை என்பதால் VFX பணிகளை கடந்த சில வருடங்களாக படக்குழுவினர் செய்து வந்தனர். இந்த நிலையில் படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. வருகிற ஜனவரி 12ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருப்பதால் படத்தின் பிரமோஷன் பணிகளை படக்குழுவினர் முடுக்கி விட்டிருக்கின்றனர். சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் வீடியோவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குழந்தைகளை கவரும் வண்ணம் இந்த படம் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  ஒரு Body..! நாலு Lady..! Prabhudeva மற்றும் Madonna sebastin இணைந்து கலக்கும் ஜாலியோ ஜிம்கானா படத்தின் ட்ரைலர் இதோ..!

'அயலான்' படத்திலிருந்து வெளியான அடுத்த ரொமான்டிக் பாடல்.! "சுரோ சுரோ.." லிரிக்கல் வீடியோ இதோ.! 3
படத்திலிருந்து ஏற்கனவே சில பாடல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது “சுரோ சுரோ..” என்ற ரொமாண்டிக் பாடல் வெளியாகியிருக்கிறது. இதில் ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங்குடன் ரொமான்டிக்காக சிவகார்த்திகேயன் ஆடும் வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் கேஜேஆர் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் அந்த பாடலை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Sony Music South

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment