இவங்க இருக்குற துறையில நான் இருக்க வேண்டுமா? செந்தில் ராஜலட்சுமியை கழுவி ஊற்றிய புஷ்பவனம் குப்புசாமி

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து வயிற்றில் குழந்தையுடன் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது போராட்டத்தில் உரிமைக்காக பாடியவர் ராஜலெட்சுமி. இந்த போராட்டத்திற்கு பிறகு அவர் வெகுவாக அறியப்பட்டார். நாட்டுப்புற கலைகளை வளர்ப்பதில் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும் தம்பதிகளில் ஒருவர் தான் ராஜலெட்சுமி-செந்தில். இருவரும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள். இவர்களின் திறமைக்கு வெளிச்சம் கொடுத்தது விஜய் டிவி. சூப்பர் சிங்கர் சீனியரில் மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்றார் செந்தில் கணேஷ். ஆனால் ராஜலெட்சுமியால் வெற்றி பெறவில்லை. ஆனாலும் மேடை பாட்டுகள், கச்சேரிகள் என படுபிஸியாக இருந்து வருகிறார்.

இவங்க இருக்குற துறையில நான் இருக்க வேண்டுமா? செந்தில் ராஜலட்சுமியை கழுவி ஊற்றிய புஷ்பவனம் குப்புசாமி 1

விளம்பரம்

நாட்டுப்புற இசையில் கைதேர்ந்த இவர்களுக்கு படத்தில் பாடும் வாய்ப்புகளும் கிடைத்தன. செந்தில் கணேஷ் அத்தை புள்ள என்ற பாடலையும், ராஜலெட்சுமி வாயா சாமி என்ற பாடலையும் பாடி அசத்தியுள்ளனர். மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இவர்களை புஷ்பவனம் குப்புசாமி மிக கடுமையாக விமர்சித்து பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. செந்தில் கணேஷ் பற்றி கூறும் போது வாயில் வரும் வார்த்தைகள் அனைத்துமே, ஆபாசமும், இரட்ணை அர்த்தமும் உள்ளது. மேடையில் நிற்கும் போது மனைவியை பக்கத்தில் வைத்துக் கொண்டே மற்ற பெண்களிடம் அசிங்கமாக சைகை செய்வதாகவும் செந்தில் கணேஷ் மீது குற்றம் சாட்டினார்.

தொடர்புடையவை  கணவர் அஜித்தின் துணிவு படத்தை பார்க்க முதல் ஆளாக ஓடி வந்த மனைவி ஷாலினி.! புகைப்படங்கள் இதோ

இவங்க இருக்குற துறையில நான் இருக்க வேண்டுமா? செந்தில் ராஜலட்சுமியை கழுவி ஊற்றிய புஷ்பவனம் குப்புசாமி 3

விளம்பரம்

இவர்கள் இருவரையும் பார்க்கும் போது இவர்கள் எல்லாம் இருக்கும் துறையில் தான் இருக்க வேண்டுமா என்று தான் நிறைய தடவை யோசித்துள்ளதாகவும், பாடுவதில் இருந்து விலகிவிடலாமா என்றும் பல முறை யோசித்துள்ளதாகவும் கூறினார். மேலும் இது ரியாலிட்டி ஷோவே இல்லை என்றும் ஏற்கனவே வெற்றியாளரை முடிவு செய்துவிட்டுதான் நாடகங்கள் நடத்துகிறார்கள் என்றும் அவர் கடுமையாக சாடினார். அவர் பேசிய அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment