சைக்கோ கொலையாளியாக அசோக் செல்வனின் மாறுபட்ட நடிப்பில் “வேழம்” படத்தின் ட்ரைலர் வெளியானது

அசோக் செல்வன் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் வேழம். த்ரில்லர் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் வருகின்ற ஜூன் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் சந்தீப் ஷ்யாம் இயக்கியுள்ளார். இவர் பல வருடங்களாக உதவி இயக்குனராகவும், குறும்படங்களையும் தயாரித்து வந்தார். வேழம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். வேழம் படத்தின் ட்ரைலர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

சைக்கோ கொலையாளியாக அசோக் செல்வனின் மாறுபட்ட நடிப்பில் "வேழம்" படத்தின் ட்ரைலர் வெளியானது 1

விளம்பரம்

இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் போன்றவர்கள் நடித்துள்ளனர். தெகிடி படத்தில் அசோக் செல்வனும் ஜனனி ஐயரும் இணைந்து நடித்து இருந்தனர். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. அந்த படத்திற்குப் பின் மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

சைக்கோ கொலையாளியாக அசோக் செல்வனின் மாறுபட்ட நடிப்பில் "வேழம்" படத்தின் ட்ரைலர் வெளியானது 3

விளம்பரம்

கே4 நிறுவனத்தின் கேசவன் என்பவர் இந்த படத்தை தயாரித்துள்ளார். காதல், காமெடி படங்களில் நடித்து வந்த அசோக் செல்வன் ஆக்‌ஷன் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். U/A சான்றிதழ் பெற்றுள்ளது இந்த படம். ஜூன் 24ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அந்த ட்ரைலரை நீங்களும் காண.. Watch Vezham Trailer Below..

தொடர்புடையவை  நடிகையாக அறிமுகம் ஆகும் குஷ்பூ மகள்..உடல் எடையை குறைத்து வேற லெவல் Transformation | Kushboo Sundar

விளம்பரம்

Video Code Embed Credits: Divo Music

விளம்பரம்

Leave a Comment