Categories: சினிமா

நேற்று இரவு நடந்த பர்த்டே பார்ட்டி.! மகள் அக்ஷராவுடன் செம்ம குத்தாட்டம் போட்ட ஆண்டவர்.!

வெளியிட்டது

கமல் நேற்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். நேற்று இரவு நடந்த நைட் பார்ட்டியில் தனது இளைய மகள் அக்ஷராவுடன் இணைந்து அவர் நடனம் ஆடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வருபவர் நடிகர் கமலஹாசன். இவர் நேற்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடினார். 1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா தொடங்கி இன்று விக்ரம் திரைப்படம் வரை அவர் சுமார் 230 படங்களுக்கு மேல் நடித்து முடித்து இருக்கிறார். தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கருடன் இணைந்து இந்தியன் 2 படத்திலும், 35 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்துடன் இணைந்து 234வது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கமலஹாசன். கீழே உள்ள வீடியோ பார்க்கவும்.

நேற்று இரவு நடந்த பர்த்டே பார்ட்டி.! மகள் அக்ஷராவுடன் செம்ம குத்தாட்டம் போட்ட ஆண்டவர்.! 1

 

நடிகர் மட்டுமல்லாமல் பாடகர், திரைப்பட கதாசிரியர், வசனம், தயாரிப்பது, படங்களை இயக்குவது, அரசியல்வாதி என்று பன்முக திறமையாளராக இருக்கிறார். ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு நடிகர் என்றால் அது கமலஹாசன் மட்டுமே. கமல் வீட்டிற்கு பலரும் நேரில் வந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். அந்த அழகிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு கமலஹாசனுக்கு பிறந்தநாள் பார்ட்டி ஒன்று நடந்துள்ளது. அதில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக நடிகை ராதிகா, பார்த்திபன், நடிகர் சித்தார்த், தேவி ஸ்ரீ பிரசாத் போன்ற பலர் கலந்துகொண்டு கமலஹாசனை வாழ்த்தியிருந்தனர். இரவு நடந்த நடன பார்ட்டியில் கமலின் மகள் அக்ஷரா கலந்துகொண்டு கமலுடன் சேர்ந்து நடனம் ஆடியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. வெகு நாட்களுக்குப் பிறகு இளைய மகள் அக்ஷராவுடன் இணைந்து கமல் குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோவை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below video..!

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்