விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை ஒருவருக்கு தற்போது விபத்து ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அவரின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ தொடர் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது.

இந்த சீரியலில் பாக்கியாவிற்கு உதவியாளராக அவரது கூடவே இருக்கும் ஒரு பாசிட்டிவ் ரோலில் நடித்து வருவார் தான் கம்பம் மீனா. இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1ல்’ நடித்திருந்தார். ஆனால் அந்த தொடரில் அவர் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.

ஆனால் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் கம்பம் மீனாவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. எந்த சூழ்நிலையிலும் தான் வேலை பார்த்து வரும் வீட்டின் உரிமையாளரான பாக்யாவிற்கு உறுதுணையாக இருக்கும் பாசிட்டிவ் ரோடிலில் நடித்து அசத்தி வருகிறார் மீனா. இந்த சீரியலுக்குப் பின்னர் கம்பம் மீனாவிற்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர்.

தற்போது கதைப்படி திருச்செந்தூருக்கு அமைச்சர் நடத்தும் மாநாட்டில் உணவு சமைப்பதற்காக செல்லும் அவர் அங்கிருந்து அமிர்தாவை கூட்டிக்கொண்டு சென்னைக்கு கிளம்புகிறார். இப்படியாக கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் நேற்று விபத்தில் சிக்கி இருக்கிறார். விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு கைமுறிவும் ஏற்பட்டிருக்கிறது.

கையில் மிகப்பெரிய கட்டுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த அவர், “நேற்று இரவு எட்டு முப்பது மணிக்கு தலைக்கு வந்தது தலைப்பாகை யோகப்பட்டு போய்விட்டது. இப்படித்தான் மனதை தேத்திக் கொண்டேன். எல்லாம் அவன் செயல்” என்று பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு எப்படி விபத்தானது.? என்ன நடந்தது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவில் மீனா குணமடையவும் ரசிகர்கள் பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.