காதல் தோல்வி.! கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த காமெடி நடிகருக்கு நடந்த சோகம்

வெளியிட்டது

கடந்த 2006ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பலரின் மனங்களை கவர்ந்த ஒரு தொடர் என்றால் அது கனா காணும் காலங்கள் தான். நம் பள்ளிக் கால நினைவுகளை அப்படியே கண்முன் நிறுத்திய ஒரு தொடர். சுனாமியில் பெற்றோர்களை இழந்த ராகவி சங்கவியின் வீட்டிற்கு வருவதும்,பின்னர் சங்கவி ராகவிக்கு இடையில் நடக்கும் சண்டைகளையும், அது மட்டும் இல்லாமல் பாண்டி, பாலா, ஜோ,பச்ச, ராகவி, சங்கவி, வினித், ரிஷி என பல கதாபாத்திரங்கள் நம்முடன் ஒன்றிப்போயிருந்தன. மேலும் இந்த தொடரில் வரும் கேப்ரியல் சார் போன்ற கதாபாத்திரங்களும் நம்மை இன்றும் பள்ளி கால நினைவுகளை நினைவூட்டுகின்றன.

காதல் தோல்வி.! கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த காமெடி நடிகருக்கு நடந்த சோகம் 1

அதற்குப் பின்னர் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை, கனா காணும் காலங்கள் 2 போன்ற பல தொடர்கள் வந்திருந்த போதிலும் முதலில் வந்த கனா காணும் காலங்களே மக்களின் மனங்களில் நிறைந்து இருக்கின்றன. அந்த தொடரில் ஒரு சிறிய வேடத்தில் பாண்டியின் தம்பியாக நடித்திருந்தவர் தான் ராகவேந்திரன். இந்த தொடரில் புலி என்னும் கதாபாத்திரத்தில் காமெடியனாக நடித்திருப்பார். இது இவருக்கு சற்று புகழை கொடுத்திருந்தது. பின்னால் எந்த பட வாய்ப்புகளும் கிடைக்காமல், வீடு வீடாக சென்று தண்ணீர் கேன் போட்டு பிழைத்து வருவதாக ஒரு பேட்டியில் அவரே கூறி இருந்தார்.

தற்போது காற்றுக்கு என்ன வேலி என்ற விஜய் டிவி நாடகம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தார். தனது ரோலுக்கு முக்கியத்துவம் இல்லாத காரணத்தினால் அவர் சீரியலை விட்டு விலகினார். சமீபத்தில் youtube சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்தவர் தனக்கு திக்குவாய் இருப்பதால் தன்னை பலரும் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க மறுக்கின்றனர் என்றும், ஆனால் ஷூட்டிங்கின் போது நான் திக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கூறிய போதும் தனக்கு பலர் வாய்ப்புகள் வழங்கவில்லை என்றும் சோகத்துடன் கூறினார். இந்த நிலையில் ராகவேந்திரன் என்கிற புலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். அதில் தனக்கு காதல் தோல்வி எனவும், அதன் காரணமாக தனக்கு மிகுந்த டிப்ரஷன் ஏற்பட்டதால் கையில் குளுக்கோஸ் ஏற்றி வரும் வீடியோவை வெளியிட்டு நல்லா இரும்மா என்று பதிவிட்டுள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்