சின்னத்திரை நாடகங்கள் தங்கள் தனித்துவங்களை இழந்து வெள்ளித்திரை படங்களை காப்பியடித்து நாட்களை கடத்துவது தற்போது வாடிக்கையாகி விட்டது. கதை மற்றும் கன்டென்ட் கிடைக்காமல் சமீபத்தில் வெளியாகி மாஸாக ஓடிக் கொண்டிருக்கும் படத்தை அப்படியே காப்பியடித்து நாடகங்களை ஓட்டி வருகின்றனர் சின்னத்திரை இயக்குனர்கள். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா என்ற சீரியலில் தெறி படத்தில் வரும் காட்சிகளையும், படையப்பா படத்தில் வரும் ஊஞ்சல் காட்சிகளையும் வசனம் கூட மாற்றாமல் அப்படியே காப்பி அடித்து வைத்து இருந்தனர். இது நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது போல் பல சீரியல்கள் காப்பி அடித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ட நாள் முதல் என்ற சீரியல் பீஸ்ட் படத்தின் காட்சிகளை அப்படியே காப்பி அடித்திருக்கிறது. இதயத்தை திருடாதே என்று சீரியலை தொடர்ந்து களர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கண்ட நாள் முதல் தொடரில் நடித்து வருகிறார் நடிகர் நவீன் குமார். இவர் சமீபத்தில் உதவி இயக்குனரை அடித்ததாக சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சையும் பணம் கொடுத்து சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது இந்த சீரியலில் பீஸ்ட் படத்தின் காட்சியை அப்படியே எடுத்து வைத்துள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மாவில் மருத்துவமனையை தீவிரவாதிகள் சுற்றி வளைப்பது போன்று காட்டப்படுகிறது. இந்த சீரியலும் கேலிக்குள்ளானது.
அதேபோன்று தற்போது கண்ட நாள் முதல் சீரியலிலும் பீஸ்ட் படத்தின் வசனத்தை கூட மாற்றாமல், அப்படியே சுட்டு வைத்துள்ளனர். இது பெரும் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்கி உள்ளது. கன்டென்ட் கிடைக்கவில்லை என்பதால் திரைப்படங்களை அப்படியே சுட்டு வசனத்தை கூட மாற்றாமல் திருடும் பழக்கத்தை எப்போதுதான் மாற்றப் போகிறீர்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.