Categories: சினிமா

அனல் தெறிக்க வெளியாகியது கங்குவா படத்தின் “FIRE SONG”..! முதல் சிங்கிளை கொண்டாடி வரும் சூர்யா ரசிகர்கள்..!

வெளியிட்டது

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

அனல் தெறிக்க வெளியாகியது கங்குவா படத்தின் "FIRE SONG"..! முதல் சிங்கிளை கொண்டாடி வரும் சூர்யா ரசிகர்கள்..! 1

அண்மையில் படத்தின் சில காட்சிகள் வெளியாகி சூர்யாவின் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்து இருந்தது. இதனால் படத்தின் எதிர்பார்ப்பு தற்போது இருமடங்காக அதிகரித்து இருக்கிறது. உலகம் முழுவதும் பத்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. சூர்யாவின் படம் அதிக மொழிகளில் வெளியாவது இதுவே முதல் முறையாகும். இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலை வெளியிடுவதாக அறிவித்து இருந்தது படக்குழு.

அதன்படி இன்று காலை 11மணிக்கு முதல் பாடலை வெளியிட்டு உள்ளது. பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. விவேக எழுதிய இப்பாடலை, விஎம் மஹாலிங்கம்,செந்தில் கணேஷ், ஷெண்பகராஜ் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர். பாடலை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Embed Video Credits : SAREGAMA TAMIL

வெளியிட்டது

புதிய செய்திகள்