இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் கங்குவா. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது. கதாநாயகியாக திஷா பட்டாணி நடித்து உள்ளார். வில்லனாக பாபி தியால் நடித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் தள்ளி சென்ற இப்படம் வருகிற 14ஆம் தேதி வெளியாக உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது.மேலும் பத்து மொழிகளில் இப்படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இப்படத்தை வெளியிட தற்போது தடை விதிக்கபட்டுள்ளது.ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வாங்கிய கடனை செலுத்தாததால்,அதன்படி 20 கோடி ரூபாயை உயர்நீதிமன்றத்தில் செலுத்தாமல் படத்தை ரிலீஸ் பண்ண கூடாது என கூறியுள்ளார்.